பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டடக் கலை சங்க காலத்தில் முருகன், கண்ணன், சிவன் முதலிய கடவுளர்க்கும் சிறு தெய்வங்களுக்கும் தமிழகத்தில் கோவில்கள் இருந்தன. "சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்' என்று சொல்லப் படுவதால், அக்காலக் கோவில்கள் அழியத்தக்க மண், செங்கல், மரம், உலோகம் இவற்ருல் ஆனவை என்று கொள்ளலாம். அப்பழங்காலக் கட்டடங்கள் செங்கல், சுண்ணும்பு, களிமண் இவற்ருலான கட்டடங்களேயாகும். கடவுளர் இடத்திற்கும் காவலன் வளமனேக்கும் கோவில்' என்பதே பொதுப்பெயராக இருந்தது. எனவே, நாடாண்ட மன்னன் வாழ்விடமும் கோவிலைப் போலவே சிறப்புற் றிருந்ததை அறியலாம். கட்டட அமைப்பிலும் இரண்டும் சிறந்தனவாக இருந்திருக்கலாம். அக்காலக் கோவில் போன்ற கட்டடங்களைக் கட்டக் கட்டடக்கலை அறிஞர் இருந்தனர். அவர் நூலறிபுலவர் (கட்டடக் கலே நூல் அறிந்த புலவர்) எனப்பட்டனர். அக்காலக் கட்டடங்கள், கட்டடக்கலை அறிஞரால் நாள் குறித்துத் திசைகளேயும் அவற்றில் கிற்கும் தெய்வங்களேயும் நோக்கி அமைக்கப் பட்டன என்பது, ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத் தேனங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து' என்னும் அடிகளால் அறியலாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/23&oldid=862954" இலிருந்து மீள்விக்கப்பட்டது