பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கல்ை 9 அரசன் கோவில் குறித்த காலத்தில் சிற்ப நூல் அறிஞர் கயிறுகொண்டு திசைகளைக் குறித்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களே வணங்கினர்; பின்பு அரசனுக்கு ஏற்ற மனேகளையும் மண் டபங்களேயும் அமைத்தனர்; அவற்றைச் சூழ மதிலே உயர்த்தினர். மதில்வாயில் மலேயை நடுவில் பிளந்ததைப் போன்ற அகற்சியும் உயர்ச்சியும் உடையது. அவ்வாயிலுள் யானைப்படை கொடியோடு செல்ல வசதி இருந்தது. வாயிற் கதவுகள் இரும்பினுல் இயன்றவை. வாயில் கிலேயைத் தாங்கும் சுவர் மீது திருமகள் சிலேயும் அதன் இரு பக்கங் களிலும் செங்கழுநீர்ப் பூக்களும் சுண்ணத்தால் அழகு ற அமைந்திருந்தன. மழை ர்ே கீழே இறங்கும்படி கிலா முற்றத்தில் பொருத்தப்பட்டிருந்த குழை, மீனின் திறந்த வாய்போல் இருந்தது. அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் உயர்ந்தவை; உயர்ந்த வேலைப்பாடு கொண்டவை; அவற்றின்மீது செஞ்சாந்து கொண்டு பூங்கொடிகள் எழுதப்பட்டு இருந்தன. தூண்கள் கருமையும், திரட்சியும், பளபளப்பும் கொண்டு விளங்கின. - பத்தினிக் கோவில் சிலப்பதிகார காலத்தில் (கி. பி. 8-ஆம் நூற்ருண்டில்) அரசனது அரண்மனைச் சோதிடன் அறக்களத்து அந்தணர், கட்டடத் தொழில் கிபுணர் ஆகியோருடன் சிற்பக்கலை அறிஞரும் சென்று கண்ணகி என்னும் பத்தினிக்குக் கோவில் அமைத்தனர் என்ற செய்தி, அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம் என்னும் அடிகளால் தெரிகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/24&oldid=862956" இலிருந்து மீள்விக்கப்பட்டது