பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழகக் கலைகள் பொன் மண்டபம் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை வாழ்ந்த காலத்தில் சோழர் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தில் அரண்மனை இருந்தது. அவ்வரண்மனைத் தோட்டத்தில் வியத்தகு வேலைப்பாடமைந்த பொன் மண்டபம் ஒன்று காட்சியளித்தது. அது மகதநாட்டு மணி வேலைக்காரராலும், மகாராட்டிரத்தைச் சேர்ந்த பொற் கொல்லராலும், அவந்தி நாட்டுக் கொல்லராலும், யவன நாட்டுத் தச்சராலும் தமிழகத்துக் கட்டட வல்லுநராலும் அமைக்கப்பட்டது. மண்டபத் தூண்கள் பவளத்தால் இயன்றவை. போதிகைக் கட்டைகளில் பலவகை மணிகள் பதிக்கப் பெற்றன. மண்டபத்தின் ஒவ்வொரு கோணத்திலும் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மண்டபத்தின் மேற்கூரை பொன் வேயப் பெற்றது. அம்மண்டபத்தின் தரை சந்தனம் கொண்டு மெழுகப் பெற்றது. மணிமேகலை என்னும் காவியம் இவ்விவரங்களைக் கூறுகின்றது. இவ் விவரங்களால் நாம் அறியும் உண்மை யாது? பண்டைத் தமிழரசர் மகதம், மகாராட்டிரம், அவந்தி, யவனம் முதலிய அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை யும், அவ்வங் காட்டில் ஒரு துறைத் தொழிலாளர் சிறக் திருந்தனர் என்பதையும், அச் சிறப்புடைத் தொழிலாள ரைத் தமிழ்வேந்தர் கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் இவ்விவரங்கள் தெரிவிக் கின்றன. எனவே, சங்ககாலத் தமிழர் கட்டடக் கலையில் கொண்டிருந்த அறிவு பாராட்டத் தக்கதன்ருே பலவகைக் கட்டடங்கள் கோவில்களும் அரண்மனைகளும் சுற்றுமதிலையும், உயர்ந்து அகன்ற வாயில்களையும், அவ்வாயில்கள்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/25&oldid=862957" இலிருந்து மீள்விக்கப்பட்டது