பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை 1 so உயர்ந்த மாடங்களையும் பெற்றிருந்தன. வாயில்களில் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் துருப் பீடியாமல் இருக்கச் செந்நிறம் பூசப்பட்டிருந்தது. மாடங்களில் அல்லது கோபுரங்களில் பல கிறங்கள் தீட்டப் பட்டிருந்தன. வணிகர் முதலிய செல்வப் பெருமக்கள் வாழ்ந்த வளமனைகளில் நிலா முற்றங்கள் இருந்தன. மாளிகைகளில் காற்றும் வெளிச்சமும் நன்கு வரத்தக்க முறையில் அகன்ற பெரிய சாளரங்கள் இருக்தன. ககரத் தெருக்கள் ஆற்றைப்போல் அகலமாகவும் நீளமாகவும் அமைந்திருந்தன. நகரைச் சுற்றிலும் கோட்டை மதில் இருந்தது. அம்மதில் மீது பலவகை இயந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டை மதிலுக்கு அப்பால் ஆழ்ந்து அகன்ற அகழி இருந்தது. அகழியில் பலவகை. முதலேகளும் மீன்களும் விடப்பட்டிருந்தன. இசையரங்கு, நாடக அரங்கு, நடன அரங்கு முதலியனவும் அக்காலத்தில் இருந்தன. அந்த அரங்குகளில் பலவகைக் காட்சிகளைக் காட்டும் திரைச் சீலைகள் தொங்க விடப் பெற்றிருந்தன. பொதுமக்கள் இருந்து காட்சிகளைக் கவனிக்கத்தக்க நிலையில் அரங்கு சிறந்த முறையில் அமைக் திருந்தது. அரங்கின் அழகிய அமைப்பைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையால் அறியலாம். மதுரைங்கரம் தாமரை மலர் வடிவத்தில் அமைக்தது என்று பரிபாடல் கூறுகின்றது. கோவில் நடுநாயகமாக வைத்து, அதைச் சுற்றியுள்ள தெருக்கள் ஏறத்தாழ வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் அந்த அமைப்பைக் கூர்ந்து நோக்கி உணரலாம், கழிநீர்ப் பாதை தரைக்கு அடியில் கட்டப் பெற்றிருந்தது. அப்பாதையில் யானே தாராளமாக நடந்து செல்லலாம் எனச் சிலப்பதி காரம் செப்புகின்றது. மதுரைப் புறஞ்சேரியில் சமணர், பெளத்தர், அந்தணர் பள்ளிகள் இருந்தன. இவற்றுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/26&oldid=862960" இலிருந்து மீள்விக்கப்பட்டது