பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழகக் ാജ് அந்தணர் பள்ளி மலையைப் பிளந்து உள்ளே குடைந்து அமைத்தாற்போன்ற கட்டட அமைப்பு உடையதாயிருக் தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இவ்வுண்மைகள் சங்க காலத் தமிழர்களின் கட்டடக் கலையறிவை நன்கு அறிவிக்கின்றன அல்லவா? - இடைக்காலத்தில் கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மகேந்திரவர்மன் என்ற பல்லவ அரசன், "அழிந்துவிடக்கூடிய மண், மரம், செங்கல், உலோகம் இவற்ருல் கோவிலே அமைக்காமல், என்றும் அழியாத நிலையில் கடவுளர்க்குக் கற்கோவில்களே அமைத்தான்' என்று அவனது மண்டகப்பட்டுக் கல் வெட்டுக் கூறுகின்றது. இதனை நோக்க, சங்க காலத்திற்குப் பிற்பட்ட பல்லவர் காலத்திலும் மண், செங்கல் முதலிய வற்ருலான கட்டடங்களே மிகப் பலவாக இருந்தன என்பது தெரிகிறது. அக்காலத்தில் பாடல் பெற்ற கோவில்கள் ஏறத்தாழ 500 என்று சொல்லலாம். அவை யனைத்தும் செங்கல் கட்டடங்களே. அவற்றுள் சில உயர்ந்த கோபுரங்களைக் கொண்டவை. கோபுரங்களில் புராண இதிகாச வரலாறுகளைக் குறிக்கும் கதை உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில கோவில்களில் மேல் மாடங்கள் அமைந்திருந்தன. உயர்ந்த மேடைகள்மீது (செய்குன்றுகள்மீது) சில கோவில்கள் கட்டப்பட்டன. அவை பெருங்கோவில்கள் என்று பெயர் பெற்றன. சில கோவில்களில் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றும் சேர்ந்த பகுதி உருளைகள் பூட்டப் பெற்ற தேர் போன்ற அமைப்புடன் கட்டப்பெற்றிருந்தன. திருச் சாய்க்காடு, மேலைக்கடம்பூர், திருவதிகை முதலிய ஊர்க் கோவில்கள் இத்தகைய அமைப்புடையவை. திருவதிகைக் கோவில் கருவறையின்மேல் தேர் போன்ற விமான அமைப்பு வியத்தகு முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/27&oldid=862962" இலிருந்து மீள்விக்கப்பட்டது