பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை 13? அமைந்துள்ளது. திருப்பெண்ணுகடம் சிவன் கோவில் விமானம் தூங்கும் யானே வடிவத்தில் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு நேர் எதிரில் முன் மண்டபத்தில் நுழைய மிகக் குறுகிய வழியும், ஆல்ை பக்கவாட்டில் அகன்ற வாயிலும் அமைந்துள்ள கோவில்கள் சில. இத்தகைய கோவில்கள் கோச்செங்கட் சோழனல் கட்டப் பெற். றவை. இவையும் இவைபோன்ற பெருங்கோவில்களும் வண்டிக் கூரைபோல் அமைந்த மேல் அமைப்புக்களே Ꮽ❍ . ©Ꮏ_.II JöJöᎫ. கற்கோவில்கள் - பல்லவர்கள் மலேச்சரிவுகளைக் குடைந்து சிறிய கோவில்களே அமைத்தனர். அவர்கள் அமைத்த குடை வரைக் கோவில். நான்கு அல்லது ஐந்து தூண்களைக் கொண்ட மண்டபம். மண்டபச் சுவரில் மூன்று அல்லது ஐந்து புரைகள் வெட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு புரை யிலும் கடவுளர் சில தனியே வைக்கப்பட்டிருக்கும். பாறையிலேயே வாயிற் காவலர் உருவங்கள் செதுக்கப் பட்டிருக்கும். மாமல்லபுரத்தில் உள்ள ஒவ்வோர் இரதமும் ஒற்றைக் கற்கோவில் ஆகும். ஒரே கல்லக் கோவிலாக அமைத்த பெருமை தமிழகத்தில் பல்லவர்க்கே உரியது. கல்லக் கோவிலாக அமைப்பது எளிதான செயலா? ஒவ்வொரு வகைக் கோவிலும் ஒருவகை விமான அமைப்புடையது. மாமல்லபுரத்துக் கோவில்களே இவ் உண்மைகளை விளக்க ஏற்ற சான்றுகள். இக் கற்கோவில்கள் பல்லவர் காலக் கட்டடச் சிறப் பைப் பார் அறியச் செய்வனவாகும். இவை பழைய செங்கற் கோவில்களைப் பார்த்து அமைக்கப் பெற்றவை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. பாறைகளைக் கற்களாக உடைத்து, அக் கற்களே ஒன்றன் மேல் ஒன்ருக அடுக்கிக் கட்டப்பெற்ற கோவில்களும் பல்லவர் காலத்தில் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/28&oldid=862964" இலிருந்து மீள்விக்கப்பட்டது