பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“; 4 தமிழகக் கலைகள் இம்முறையில் அமைந்த சிறிய கோவிலை மாமல்லபுரத்துக் கடற்கரையில் காணலாம்; பெரிய கோவில்களைக் காஞ்சி .யிற் காணலாம். காஞ்சி கைலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் முதலியன இம்முறையில் கட்டப்பெற்ற பெருங் கோவில் களாகும். இவற்றின் விமானங்கள் அடியிற் பருத்து மேலே செல்லச் செல்ல சிறுத்துச் செல்லும் பல சதுரங் களைக் கொண்ட அமைப்புடையவை. இந்த அமைப்பின் முழுவளர்ச்சியைப் பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலிலும் கங்கை கொண்ட சோழேச்சரத்திலும் காணலாம். கற்றுண்கள் பல்லவர் காலக் கோவில் தூண்கள் பலவகைப் பட்டவை. நாற்புறமும் ஒரே அளவுடைய சதுரத் தூண் கள் ஒரு வகையின; உட்கார்ந்துள்ள சிங்க வடிவில் அமைந்த தூண்கள் பிரிதொரு வகையின. சதுரத் தூண் களும் நீள் சதுர அமைப்புடைய தூண்களும் சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் காலத்தவை. உட்கார்ந்துள்ள சிங்கத் தூண்கள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை. கிற்கின்ற சிங்க உருவைப் பெற்ற தூண்கள் இராச சிம்மன் காலத்தவை என்று ஆராய்ச்சியாளர் அறைவர். சதுரத் தூண்களின் கீழ்ச் சதுரத்திலும் மேல் சதுரத்திலும் தாமரை மலர்களும் வட்டங்களும் செதுக்கப்பட்டிருக் கும். தூண்கள் பொருத்தப் பெற்ற மண்டப அல்லது வாயில் அடிப் பகுதியில் இரட்டைத் திருவாசி காண்ப் படும். அதனில் வளைவுக் கோடுகள், மகர மீன்கள் முதலியன செதுக்கப்பட்ட அமைப்புப் பார்க்கத்தக்கது. பல்லவர் கால்க் கோவில்கள் சிறந்த முறையில் ஆட்சி செய்யப் பெற்றன என்பதை நோக்கவும், பல கோவில்களில் ஆடல் அழகிகளும் பாடல் அழகிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/29&oldid=862966" இலிருந்து மீள்விக்கப்பட்டது