பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை 15 பலவகைப் பணி மக்களும் இருந்தனர் என்பதை நோக் கவும், இவை அளவில் பெரியனவாகவும், பலவகை மண்ட பங்களைப் பெற்றிருந்தனவாகவும் இருந்தன என்பது பொருத்தமாகும். எனவே, பல்லவர் காலத்தில் சில கோவில்களேனும் அளவில் பெரியனவாகவும் மண்ட பங்கள் மாளிகைகள் போன்ற கட்டடங்களை உடையன வாகவும் இருந்தன என்று சொல்லலாம். இவற்றை நோக்க, சங்ககால கட்டடக் கலே பல்லவர் காலத்தில் வளர்ச்சி யுற்ற நிலைமையை நன்கு உணரலாம். சோழர் காலத்தில் என்றும் உள்ள இறைவனுக்கு என்றும் உள்ள கோவிலாக அமைக்க வேண்டும் என்று பல்லவர்க்குப் பின் வந்த சோழப் பேரரசர் விரும்பினர்; அவ்விருப்பப் படி, பாடல் பெற்ற கோவில்களைக் கற்கோயில்களாக மாற்ற முனைந்தனர். அம்முயற்சி கானூறு ஆண்டு காலம் நடைபெற்றது. அம் முயற்சியில் பேரரசர், சிற்றரசர், அரசாங்க அலுவலர், அரசமாதேவியர், குடிமக்கள் ஆகிய அனைவரும் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. செங்கல்லால் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு கோவில் பகுதியும் கருங்கல்லால் கட்டப்படலாயிற்று. சோழர் ஆட்சியில் கோவில் நிகழ்ச்சிகள் பெருகின. மாதந்தோறும் ஏதேனும் ஒரு விழா நடைபெற்றது; கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர்ச் சிவன் கோவில் போன்ற பெரிய கோவில்களில் பல மண்ட பங்கள் புதியனவாகக் கட்டப் பெற்றன; கோவில்களே அடுத்து மடங்கள் அமைப்புண்டன. கல்லூரிக் கட்டடங் களும் கோவிலுள் அமைந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/30&oldid=862970" இலிருந்து மீள்விக்கப்பட்டது