பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழகக் கல்கள் தில்லைக் கூத்தப் பெருமான் கோவில், காஞ்சி ஏகாம் பரேசுவரர் கோவில் போன்ற பெரிய கோவில்களில் திருச்சுற்று மாளிகைகளும் கட்டப்பெற்றன. அவற்றில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் கிலேயமும் வகுப்புகளும் கடைபெற்றன. திருமுறைகளைப் பாதுகாக்கவும் கற்பிக்க வும் மண்டபங்கள் கட்டப்பட்டன. நடன மண்டபம், நாடக மண்டபம், இலக்கண மண்டபம் என்பனவும் அமைந்திருந்தன. புராணங்களேப் படித்து விளக்குவதற் காக மேடைகளும் மாளிகைகளும் கோவிலுள் அமைக்கப் பட்டன. திருவிழா திகழ்ச்சிகளே மக்கள் கண்டு களிக்கவும் சமயச் சொற்பொழிவுகளே இருந்து கேட்கவும் தக்க முறை யில் அகன்ற திருச்சுற்றுகள் இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் நேரில் பார்ப்பவர் இவ்வுண்மைகளே உணர்வர். சோழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழேச்சரத்திலும் தாராசுரத்துச் சிவன் கோவிலும் திரிபுவன வீரேசுவரமும் சோழர் காலக் கட்டடக் கலைச் சிறப்பை நன்கு அறிவிப்பன ஆகும். உயர்ந்து, அகன்று, பகைவரைத் தாக்கும் கிலேயில் அமைக் துள்ள மதில்கள் தஞ்சைப் பெரிய கோவிலிலும் கங்கை கொண்ட சோமேச்சரத்திலும் காணலாம். திருச்சுற்றுத் தரையைவிட உயர்த்திக் கட்டப்பெற்ற முன் மண்டபம், நடு மண்டபம், கருவறை இவற்றின் சுவர்கள், பதின்ைகடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்கள், இருநூறு அடிக்கு மேற்பட்ட வானளாவ உயர்ந்து விளங்கும் விமானம், விமானத்திலுள்ள உருவச் சிற்பங்கள், விமா னத்தை அடுத்துள்ள மாளிகை ஆகிய அனைத்தும் சோழர் காலக் கட்டடத் திறனே நன்கு விளக்குவன ஆகும். தாராசுரத்துச் சிவன் கோவில் கட்டடக் கலைக்குப் பெயர் போனது. உருளைகள் பூட்டப் பெற்ற அமைப்புடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/31&oldid=862972" இலிருந்து மீள்விக்கப்பட்டது