பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை 17 கோவிலின் நடுப்பகுதி அற்புத வேலைப்பாடமைந்த தூண்க ளாலும் மண்டபங்களாலும் உருவச்சிற்பங்களாலும் பொலி வுற்று விளங்குகின்றது. தில்லே போன்ற பெருங் கோவில் களில் அம்மனுக்கென்று பெரிய தனிக்கோவில்கள் பெருங் கோவிலுள்ளே அமைப்புண்டன. திருச் சுற்றின் அடிப் பகுதிக் கற்சுவரில் பலவகை நடன உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கங்கை கொண்ட சோழேச்சரத்தில் அமைக் துள்ள சிங்கமுகக் கிணறு சோழர் காலக் கட்டடத் திறனைக் காட்டுவதாகும். சிதம்பரம், மதுரை, குற்ருலம் முதலிய இடங்களில் பொன், வெள்ளி, செம்பு இவற்ரு லாகிய கூரை விமானங்களே உடையவை. சிவாயநம' என்னும் ஐந்து எழுத்துக்கள் எழுதப்பெற்ற பொன் தகடு களேக் கொண்டு அமைந்தது தில்லையிலுள்ள பொன்னம் பலக் கூரை. மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் விசயநகர ஆட்சிக் காலத்தில் விமானங்கள் சிறுத்துக் கோபுரங்கள் உயர்த்திக் கட்டப்பட்டன. இந்த முயற்சி சோழரது ஆட்சி இறுதியில் தொடங்கப் பெற்றது எனினும், விசயநகர வேந்தர் காலத்தில் வளம்பெற்றது. சோழநாட்டிலுள்ள கோவிற் கோபுரங்கள், திருவண்ணு மலைக் கோவில், மதுரை மீட்ைசியம்மன் கோவில், இராமேசுவரம் கோவில் முதலியவற்றின் கோபுரங்களும் அவற்றில் பல கதைகளே விளக்கும் உருவச் சிற்பங்களும் விசயநகர வேந்தர் காலத்தவை. எழுங்கில மாடம், ஒன்பது நிலை மாடம், பதினொரு கிலே மாடங்களையுடைய கோபுரங்கள் தமிழர் கட்டடத் திறமைக்குத் தக்க சான்ருகும். - . . . . . சோழர் காலத்திலேயே தில்லை போன்ற பெரிய கோவில்களில் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்திருந்தன. の به

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/32&oldid=862974" இலிருந்து மீள்விக்கப்பட்டது