பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழகக் கலைகள் பிற்கால கில் அவை பெருகின. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் நாயக்க மன்னர் காலத்தது. குதிரை வீரர்களின் உருவம் செதுக்கப்பட்ட மிக உயர்ந்த கற்றுண்கள் நாயக்கர் காலத்தவை. அத் தூண்களே நிறுத்தி மிகவும் உயர்த்திக் கட்டப் பெற்றுள்ள கோவில் திருச்சுற்றுக்கள் நாயக்கர் காலத்தவை. திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் கோவில், மதுரை மீனட்சி யம்மன் கோவில், புதுமண்டபம் - என்பன நாயக்கர் காலத்துக் கட்டடக் கலை வளர்ச்சியை நன்கு உணர்த்து வனவாகும். - திருச்சி மலைமீது கட்டப்பெற்றுள்ள தாயுமானவர் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டது. மலையைக் குடைந்து, மலைமீது கற்களேக் கொண்டு சென்று அரும்பாடு பட்டுக் கட்டப்பெற்ற அக் கோவில், தமிழரது கட்டடத் திறமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். திருப்பரங் குன்றம் முருகன் கோவில், குடைவரைக் கோவிலும் முன்புறம் கட்டப் பெற்ற கோவிலமைப்பும் பொருந்திய தாகும். இங்ங்னம் மலைமீதும் அடிவாரத்திலும் கட்டப் பெற்ற கோவில்கள் தமிழர் தம் கட்டடக் கலையறிவை நன்கு தெரிவிப்பனவாகும். தஞ்சை, திருவாரூர், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை, காஞ்சி என்னும் இடங்களில் இருந்த சோழ பாண்டிய பல்லவ அரண்மனைகள் காலப் போக்கில் அழிந்து விட்டன. ஆதலால் இடைக்கால அரண் மனைகள் எவ்வாறு கட்டப் பெற்றிருந்தன என்பதை நாம் ஆறிய முடியவில்லை. மிகவும் பிற்பட்ட காலத்தில் கட்டப் பெற்ற மதுரைத் திருமலை நாயக்கர் மகாலும், தஞ்சாவூர் அரண்மனையும் பிற்காலக் கட்டடக்கலைச் சிறப்பை நமக்கு அறிவிக்கின்றன. தஞ்சை அரண்மனையின் மிக உயர்ந்த மதில், எழுகில மாடம், சங்கீத மகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/33&oldid=862976" இலிருந்து மீள்விக்கப்பட்டது