பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒவியக் கலை முன்னுரை நாம் கண்ணில் காணும் பொருள்களைச் சித்திரித்து எழுதும் கலேயே ஓவியக்கலை. பண்டை மனிதன் தான் பார்த் தவற்றையே படமாக எழுதிக் காட்டின்ை; பின்பு அறிவு வளர வளர, தன் மனத்தால் பல உருவங்களையும் காட்சி களையும் முடிவு செய்து அவற்றைப் படங்களாக வரைக் தான்; எண்ணும் ஆற்றலில் சிறந்த புலவர் பெருமக்க ளுடைய கருத்து ஓவியங்களுக்கு உருவங்களே அமைத்தான். இவ்வாறு ஓவியக் கலையில் கானும் பொருளிலிருந்து எண்ணும் செய்திகள் வரையிலும் உருவம் தரும் முறை வளர்ச்சி பெற்றது. சுருங்கக் கூறின், ஓவியக்கலே, வீடுகட்ட அறியாத மனிதன் குகையில் வாழ்ந்தபோதே தோற்ற மெடுத்தது என்று கூறலாம். பழைய மக்கள் வாழ்ந்த குகை களில் சிறு சிறு ஓவியங்கள் இன்றும் காணப்படுகின்றன. ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளிப் பொருள்களில் ஒவியம் திட்டப்பெற்ற மட்பாண் டங்கள் பலவாகும்; தாயித்துக்கள் பலவாகும். இவ்வாறே சுமேரியர், எகிப்தியர் புதை பொருள்களிலும் ஒவியங்கள் காணப்படுகின்றன. எனவே, ஒவியம் வரையும் வழக்கம் மனிதனது தொடக்கத்திலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது என்று கூறுதல் பொருத்தமாகும். - சங்க காலத்தில் இன்றுள்ள தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். போரில் விழுப்புண்பட்டு வீரர்கள் இறந்த இடத்தில் அல்லது அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/35&oldid=862980" இலிருந்து மீள்விக்கப்பட்டது