பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக்கலை 21 களேப் புதைத்த இடத்தில் அல்லது அவர்களது உடற் சாம்பலை அடக்கம் செய்த இடத்தில் ஒரு கல் கடப்படும்; அக்கல்லில் இறந்த வீரனது உருவம் செதுக்கப்படும்; பின்னர் அதற்குப் பூசை நடத்தப்பெறும். அதற்கு நடுகல் என்பது பெயர். அது வீரராலும் இறந்தவன் மரபினராலும் தொழப்படும். கல்லில் இவ்வாறு ஒர் உரு வம் செதுக்கப்படுவதற்கு முன் அவ்வுருவத்தை ஒவியமாக வரைந்து கொள்ளுதலே வழக்கமாகும். அந்த ஒவியத்தின் உதவி கொண்டே, கல்லில் உருவம் செதுக்கப்படும். இவை தொல்காப்பியம் குறிப்பிடும் செய்திகள். எனவே, தொல்காப்பியர் காலத்திலேயே (ஏறத்தாழ 3300 ஆண்டு களுக்கு முன்பே) ஒவியம் தீட்டும் வழக்கம் தமிழரிடம் இருந்து வந்தது என்பது தெளிவாகும். - சங்க கால நடன மகளிர் நடனக் கலைக்காகப் பல்வேறு கலேகளேயும் கற்றனர்-அவற்றுள் ஓவியக்கலை ஒன்று என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. " நாடகமகளிர்க்கு நன்கணம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறையோகிய பொற்ருெடி கங்கை ' இவ்வடிகளே நோக்க, ஓவியக்கலை பற்றிய சிறந்த நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்தது என்பது தெளி வாதல் காண்க. மாதவியின் நடன அரங்கேற்றம் நிகழ்ந்த அரங்கின் மேற்கூறையில் கண்கவர் ஓவியங்கள் பல திட் டப்பட்டிருந்தன. அக்கூரை ஓவியவிதானம் எனப்பெயர் பெற்றது. உலோகங்களாலான கேடயங்களில் கண்ணேக் கவரும் ஒவியங்கள் திட்டப்பட்டிருந்தன என்று சிலப்பதி காரம் செப்புகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது கோப்பெருந்தேவி படுத்திருந்த கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/36&oldid=862982" இலிருந்து மீள்விக்கப்பட்டது