22 தமிழகக் கலைகள் லின் மேற்கூறையிலும் பலவகை ஒவியங்கள் திட்டப் பெற்றிருந்தன. அவற்றுள் திங்களின் பக்கத்தில் உரோ கிணி இருப்பது போன்ற ஒவியம் ஒன்ருகும். கணவன் பிரிவால் வாடிய கோப்பெருந்தேவி அவ்வோவியத்தைக் கண்டு, உரோகிணியைப் போல நானும் என் கணவைேடு என்றுமே இணைந்திருக்க முடியாதோ' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள். இது நெடுநல்வாடை தரும் செய்தியாகும். செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும் மாடங் கள் மீதும் தேவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத் தக்க ஒவியங்கள் தீட்டப்பெற்றிருந்தன என்னும் செய்தி மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. “ விம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனதொறு மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுகிற் குநரும் ' மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோவிலில் மண்டபங்கள் பல இருந்தன. அவற்றில் புராண இதிகாசக் கதைகள் பல ஒவியங் களாகக் காட்சியளித்தன. அவற்றுள் கதிரவன், திங்கள், கோள்கள், இரதி, மன்மதன், இந்திரன், அகலிகை, பூனே, கெளதமன் என்னும் உயர்திணை-அஃறிணைப் பொருள் களைக் குறிக்கும் ஒவியங்கள் எழுதப்பெற்றிருந்தன என் பரிபாடல் பகர்கின்றது. - காதலன் தான் விரும்பிய பெண்ணே மணக்க முடி யாத நிலையில் ஒரு துணியில் அவள் உருவத்தை ஒவிய மாக வரைந்துகொண்டு மடல் ஏறுதல் வழக்கம் என்று. அகப்பொருள் நூல்கள் கூறுகின்றன. நிறங்கள் திட்டப்
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை