பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கல்ை 23 பெருது மேலோட்டமாக வரையப் பெற்ற ஓவியம் 'புனையா ஓவியம்' எனப்பட்டது. ஒவியங்களே அமைத்து ஆடை நெய்தல் சங்க காலத் தமிழகத்தில் வழக்கமாயிருந்தது. ஆடைகளில் ஒவியங்களே அமைத்தல் எளிதான செயலன்று. அங்ங்ணம் அமைத்தவர் மிகச் சிறந்த ஒவியத் திறனளராக இருந்திருத்தல் வேண்டு மல்லவா? காவிர்ப்பூம்பட்டினத்தில் இருந்த உவவனம், சிறந்த ஓவியரால் ஓவியங்கள் அமைத்துச் செய்யப்பெற்ற ஆடை போலக் காட்சியளித்தது என்று மணிமேகலை ஆசிரியர் குறித்துள்ளார். “ வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் - இவ்வாறு சுவர்களிலும் மண்டபக் கூரைகளிலும் ஆடைகளிலும் கேடயங்கள் மீதும் கண்கவர் ஓவியங்களேத் திட்ட வல்லவர் மிகச் சிறந்த ஓவியக்காரராக இருக்க வேண்டும் அல்லவா? அக்கலைவாணரைக் கண்ணுள் வினைஞர், என்று மதுரைக் காஞ்சி செப்புகிறது. மதுரைக் காஞ்சிக்கு உரை எழுதிய கச்சினர்க்கினியர், “கண்ணுள் வினைஞர்நோக்கினர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று கூறியுள்ளார். அஃதாவது, "பார்ப்பவர் கண்ணேயும் கருத் தையும் ஈர்க்கத்தக்க ஒவியங்களேத் திட்டுவோர்' என்பது பொருள். எனவே, சங்க காலத்தில் ஒவியக்கலே சிறந்த முறையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை இதுகாறும் கூறப்பெற்ற விவரங்களைக் கொண்டு நன்கு தெளியலாம். சித்தன்னவாசல் ஒவியங்கள் - - சங்க காலத்திற்குப் பிற்பட்ட பல்லவர் காலத்தில் (岛. பி. 300-900) குடைவரைக் கோவிலில் பாறைச் சுர்ை களின் மேற்கூரையில் ஒவியங்கள் திட்டப்பெற்றிருந்தன. மாமண்டுர்க் குகைக்கோவில், காஞ்சி கயிலாசநாதர் கோவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/38&oldid=862986" இலிருந்து மீள்விக்கப்பட்டது