பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24、 தமிழகக் கலைகள் முதலியவற்றின் சுவர்களில் பல நிறங்கள் காணப்படு கின்றன. அங்கு வரையப்பட்ட ஓவியங்கள் காலப் போக்கில் அழிந்துபட்டன. அழியாமல் இன்றளவும் நாம் பார்க்கத்தகும் கிலேயில் இருப்பவை சித்தன்னவாசல் ஓவியங்களேயாகும், - சித்தன்ன வாசல் புதுக்கோட்டைக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் இருக்கின்றது. அங்குள்ள குன்று ஒன்றில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. அதனேக் குடைவித்தவன் மகேந்திரவர்மன். அதன் முன் மண்ட பத்தில் நான்கு தூண்கள் இருக்கின்றன. நடுத்துாண்கள் இரண்டில் நடன மாதர் இருவரின் உருவங்கள் தீட்டப் பெற்றுள்ளன. அவர்தம் கூந்தல் அமைப்பு, ஆடை அமைப்பு, அணிவகைகள், நடனமாடும் நிலையில் கைகள் வைத்துள்ள முறை முதலியன அவற்றை எழுதிய ஓவியர் திறமையை உலகறியச் செய்கின்றன. அவ்வோவியங்களேக் கொண்டு, அக்காலத் தமிழகத்து நடனமாதர் தம் கூந்தல் அமைப்பு, ஆடை அமைப்பு, அணிவகைகள் முதலிய வற்றை நாம் ஒருவாறு அறியலாம். - வலப்புறத் தூணின் உட்பகுதியில் அரசன் அரசியர் தலைகள் ஒவியங்களாகத் திட்டப்பட்டுள்ளன. மணிகள் பதிக்கப் பெற்றுச் சிறந்த வேலைப்பாடு கொண்ட மகுடம் ஒன்று அரசன் முடிமேல் காட்சியளிக்கிறது. அவன் காது களில் குண்டலங்கள் தொங்குகின்றன. அரசியின் தலை மீது ஒருவகை மகுடம் அழகுசெய்கின்றது; அவள் காது களில் வளையங்கள் காண்கின்றன. இருவர் உருவங் களும் அழகாக எழுதப்பட்டுள்ளன. மேற் கூரையில் பெரிய ஓவியம் ஒன்று காணப்படுகின்றது. அது ஒரு தாமரைக் குளத்தைக் குறிக்கின்றது. தாமரை இலைகள், மலர்கள், பேரரும்புகள் என்பன அக்குளத்தை அழகு செய்கின்றன. சமணப் பெரியோர் சிலர் தாமரை மலர் களைப் பறிக்கின்றனர். குளத்தில் எருமைகளும் மீன்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/39&oldid=862989" இலிருந்து மீள்விக்கப்பட்டது