பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலை 25 காணப்படுகின்றன. கண்ணேயும் கருத்தையும் தன்பால் இழுக்கும் அவ்வோவியம் ஏறத்தாழ 1800 ஆண்டுகட்கு முன் எழுதப் பெற்றதாயினும், இன்னும் காம் கண்டு களிக்கும் கிலேயில் இருக்கின்றது என்பதை எண்ண, அதனே எழுதிய ஓவியர் திறமையை என்னென்பது’! தஞ்சை ஒவியங்கள் பல்லவர்க்குப் பிற்பட வந்த சோழர் கால ஒவியங்களுள் இன்று நாம் காணுமாறு இருப்பவை தஞ்சைப் பெரிய கோவில் ஒவியங்களே யாகும். அவை தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச் சுவர்கள் மீது எழுதப்பட்டுள்ளன. பல நூற்ருண்டுகளுக்குப் பிறகு அவை மறைக்கப்பட்டு, அவற்றின் மீது நாயக்கர் கால ஒவியங்கள் எழுதப்பட்டன. இன்று இவ்விருவகை ஒவியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. சோழர் கால ஓவியங்கள் கி. பி. 11-ஆம் நூற்ருண்டில் வரையப் பெற்றவை. சுந்தரர் சிவபெருமால்ை தடுத்தாட் கொள்ளப்பட்ட வரலாறு தஞ்சைப் பெரிய கோவிலில் ஒவியமாக திட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கிழவேதிய ராகத் திருமண மண்டபத்தில் வந்து கிற்கிருர், அவரது ஒரு கையில் தாளங்குடையும், மற்ருெரு கையில் பனே ஒலயும் காணப்படுகின்றன. மணமண்டபத்தில் மறை யவர் பலர் கூடியிருக்கின்றனர். மணமகனரான சுந்தரர் தமது மணத்தைத் தடுக்க வந்த கிழவரை வியப்போடு பார்க்கின்ற பார்வை அழகாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஓவியம் கயிலைக் காட்சியை குறிக்கிறது. சிவபெருமான் புலித்தோல் மீது அமர்ந்திருக்கிரு.ர். அவரைச் சுற்றிலும் தேவரும் பூத கணங்களும் காணப் படுகின்றனர்.

  • இவை பிற்கால ஓவியங்கள் என்று இப்பொழுது சிலர் கருதுகின்றனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/40&oldid=862992" இலிருந்து மீள்விக்கப்பட்டது