பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழகக் கலைகள் இக் காட்சிக்கு அடியில், சுந்தரர் வெள்ளேயானே மீது அமர்ந்து செல்லுதலும் சேரமான் பெருமாள் நாயனர் குதிரைமீது செல்லுதலும் ஒவியங்களாகக் காட்டப்பட் டுள்ளன. யானைமீது உள்ள அணிவகைகள் பார்க்கத் தகுந்தவை. சுந்தரர் தலே முடியும் தாடியும் வைத்துள்ளார். பல அணிகளே அணிந்துள்ளார்; கைகளில் தாளத்தை வைத்துள்ளார். அவரது யானை விரைந்து செல்லுகிறது. அதன் காலடியில் கடல் நீர் காண்கிறது. கடலின் அடியில் மீன்கள் காட்சி அளிக்கின்றன. சேரநாட்டுத் தலைநகரான கொடுங்கோளுரை விட்டு, அதன் அரசரான சேரமான் பெருமாள் நாயனருடன் சுந்தரர் கடல் ஒரமாகக் கயிலை கோக்கிச் செல்லும் காட்சியே அங்கு ஒவியமாகத் திட்டப் பட்டுள்ளது. சேரமான் அணிந்துள்ள அணிகளும் அவரது முடி அழகும் குதிரையின் அணி விசேடமும் பார்க்கத் தகுந்தவை. இவ்வோவியங்கள், இடைக்கால அணிவகை களேயும், ஆடவர் குஞ்சி அமைப்பையும், பிறவற்றையும் நன்கு உணர்த்துவனவாகும். இவ்வோவியங்கள்ை அடுத்துச் சோழர்கால நடன மகளிரைக் குறிக்கும் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்மகளிருடைய கூந்தல் ஒப்பனையும் அணிவகைகளும் உருவ அமைதியும் அவர்கள் கைகளிலுள்ள இசைக் கருவி களும் காம் கவனிக்கத் தக்கவை. இவ்வோவியம் பழுது பட்டிருப்பினும், மிகச் சிறந்த முறையில் அக் காலத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. துர்க்கை எருமைத்தலை அசுரனக் கொல்லும் ஒவியம் அழ. கானது. இவ்வோவியங்கள் சோழர்கால ஓவியக் கலை வளர்ச்சியை நமக்குத் தெரிவிக்கின்றன. இவை அரசாங்கப் புதை பொருள் அலுவலரால் செப்பனிடப்பட்டும் பாது காக்கப்பட்டும் வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/41&oldid=862994" இலிருந்து மீள்விக்கப்பட்டது