பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலை 27 பிற்காலத்தில் மேலே கூறப்பெற்ற சோழர் கால ஒவியங்களுக்கு மேல் சுண்ணும்புப்படை பூசப் பெற்று, அப் படைமீது, நாயக்கர் கால ஓவியங்கள் திட்டப் பெற்றிருந்தன. அவையும் மதுரை மீட்ைசியம்மன் கோவில் சுவர்கள் மீதுள்ள ஒவியங்களும் ஏறத்தாழ ஒன்ருக இருக்கின்றன. மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் பொற்ருமரைக் குளத்திற்கு எதிரி லுள்ள சுவர்களில் ஒவியங்களாகக் காட்சியளிக்கின்றன. நாயக்கர் கால மக்களுடைய உடை, கூந்தல், ஒப்பனே, அணிவகைகள், உடை வகைகள் முதலியவற்றை இவ் வோவியங்களேக் கொண்டு நாம் அறியலாம். திருக்குற்ருலத்திலுள்ள சித்திர சபையில் (ஓவிய அரங்கில்) உள்ள ஒவியங்கள் நாயக்கர் காலத்தவை. தில்லையில் சிவகாமியம்மன் திருமுன்பு உள்ள மண்டபக் கூரையில் கட்டப்பட்டுள்ள ஓவியங்களும் நாயக்கர் காலத் தவை. அவற்றுள் திருமால் மோகினி அவதாரம் எடுத்துத் தாருகவனத்து முனிவரை மயக்கும் காட்சி, சிவபிரான் பி ட்சாடனராக வருதலையும் அவரைக் கண்டு முனிவர் மனைவியர் உள்ளம் நெகிழ்தலையும் குறிக்கும் ஒவியங்கள் காணத்தக்கவை. - - இக்காலத்தில் - நாம் வாழும் இருபதாம் நூற்ருண்டிலும் ஓவியக்கலே வளர்ந்து வருகிறது. பள்ளிகளில் ஒவியக்கலே வளர்ந்து வருகிறது. பள்ளிகளில் ஒவியக்கலை கற்பிக்கப்படுகிறது. கோவிற் சுவர்களில் ஒவியங்கள் திட்டப்படுகின்றன.தில்லை. யில் புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோவிலில் எழுதப் பட்டுள்ள ஒவியங்கள் இக்கால ஓவியக்கலை அறிவிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும், ஓவியக்கலே கண்ணே யும் கருத்தையும் ஈர்த்து ஒருநிலைப் படுத்துவதாகும்; உள்ளத் துக்கு உணர்ச்சி ஊட்டுவதாகும். இத்தகைய சிறப் புடைமையாற்ருன் இது நுண் கலைகளுள் ஒன்று என்று அறிஞரால் பாராட்டப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/42&oldid=862997" இலிருந்து மீள்விக்கப்பட்டது