பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிற்பக் கலை முன்னுரை மண், மரம், செங்கல், கல், உலோகம், தந்தம், மெழுகு, அரக்கு முதலியவற்றைக் கொண்டு உருவங்களை அமைக்கும் கலேயே சிற்பக்கலை என்பது. " வழுவறு மரனும் மண்ணுங் கல்லுங் எழுதிய பாவை......... * jst 4 : மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க' என வரும் மணிமேகலை அடிகள் கவனிக்கத்தக்கவை. சங்க காலத்தில் வீரக்கல் ஏறத்தாழக் கி. மு. 300-இல் செய்யப்பட்ட தொல் காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கண நூலில் சிற்பக் கலே பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரனுக்குக் கல் நடுவது பழங் தமிழர் வழக்கம். மாண்ட வீரனது உருவம் அக்கல்லில் பொறிக்கப் பெறும். இங்ங்னம் வீரருக்குக் கல் நடுதல் தொல்காப்பியர் காலத்தில் திடீர் என எழுந்ததன்று; அவருக்கு முன்பே தொன்றுதொட்டு வந்த பழக்கமாகும்; எனவே, சிற்பக்கலே தமிழகத்தில் பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலை என்பது ஐயமற விளங்கும் உண்மையாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/43&oldid=862998" இலிருந்து மீள்விக்கப்பட்டது