பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 29 கி. பி. 3-ஆம் நூற்ருண்டில் செய்யப் பெற்ற சிலப்பதி காரத்தில் கண்ணகி என்னும் பத்தினிக்கு உருவம் பொறித்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பாவைகள் கொல்லிமலையில் பெண் தெய்வத்தின் உருவச் சில ஒன்று கோவிலிலோ-மண்டபத்திலோ-தனிக்கல்லிலோ -அல்லது தூணிலோ-பொறிக்கப் பட்டிருந்தது. அது தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. "கொல்லிப் பாவை அன்னய்' என்று அழகிய பெண்ணே அழைப்பது பண்டை வழக்கம். எனவே, அப் பாவை சிற்ப முறைப்படி நன்முறையில் அமைக்கப்பட்டிருந்தது என்றுகொள்ளலாம். இவ்வாறே காவிரிப்பூம்பட்டினத்தில் பூசைக்கென நடப்பெற்ற பாவை ஒன்று இருந்தது. அது கந்திற்பாவை எனப் பெயர் பெற்றது. அது வருவது உரைக்கும் ஆற்றல் உடையது என்று மணிமேகலை கூறுகின்றது. வழிபாட்டு உருவச் சிலைகள் " பேரூரில் சிவன், முருகன், திருமால், பலதேவன், கொற்றவை (துர்க்கை), சூரியன், சந்திரன் முதலிய பல தெய்வங்களுக்கும் இந்திரனது வெள்ளே யானைக்கும் கோவில்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இக்கோவில்களில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களின் உரு வங்கள் சுதையாலும், மரத்தாலும், கல்லாலும் செய்யப் பெற்றிருத்தல் வேண்டும் என்று கொள்வது பொருத்த மாகும். இன்றுள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதி அம்மன் கோவில் சிதைந்து காணப்படுகிறது. அதில் காணப்படும் உருவங்கள் சுதையால் ஆனவை. எனவே,

  • இவை வழிபாட்டுக்குரிய உருவச் சிலைகளாயினும் சிற்பக்கலையால் உருப்பெற்றவையாதலால், இங்குக் கூறப் பெற்றுள்ளன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/44&oldid=863000" இலிருந்து மீள்விக்கப்பட்டது