பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழகக் கலைகள் சுதை உருவங்கள் சங்க காலத்தில் இருந்திருத்தல் பொருத்த மேயாகும். இன்னும் தமிழ்நாட்டுப் பழங்கோவில்கள் பலவற்றுள் கஜலட்சுமியின் உருவம் சுதையால் செய்யப் பெற்றதாகவே இருக்கிறது. திருவாரூரில் உள்ள பெரிய சிவன் கோவிலில் இருக்கும் வாயிற் காவலர் உருவங்கள் சுதையும் செங்கற்களும் கொண்டு அமைக்கப் பட்டனவாய் இருக்கின்றன. இத்தகைய உருவங்களே சங்க காலத்தில் பலவாக இருந்திருத்தல் வேண்டும் மாங்காட்டு மறையவன் திருவேங்கட மலையில் திருமாலது நின்ற கோலத்தையும் திருவரங்கத்தில் கிடந்த கோலத்தையும் கண்மணி குளிர்ப்பக் கண்ட தாகச் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துக் கூறுவதால் அப் பெருமாள் உருவச்சிலைகள் கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்டனவாக இருந்திருத்தல் வேண்டுமல்லவா? பூம்புகார் நகரத்திலிருந்த மாளிகைகளில் சுதையில்ை செய்யப்பட்ட உருவங்கள் காட்சியளித்தன. இந்திர விழாவின்போது அங்ககரத்திற்கு வந்த மக்கள் அவற்றைக் கண்டு களித்தனர் என்பதை மணிமேகலை கீழ்வருமாறு உணர்த்துகின்றது. ' வம்ப மாக்கள் கம்பலை மூதூர் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங் கண்டுகிற் குநரும். ' இன்றுள்ள சி. ற் று ர் க ளி லு ம் பேரூர்களிலும் தருமராசர் கோவில்களும் திரெளபதியம்மன் கோவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/45&oldid=863003" இலிருந்து மீள்விக்கப்பட்டது