பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 3 | களும் இருக்கின்றன. அவற்றில் கண்ணன், பஞ்ச பாண்டவர், திரெளபதியம்மன் ஆகியோர் உருவச் சிலைகள் இருக்கின்றன. அவை மரத்தால் இயன்றவை. இங்ங்னம் மரங்கொண்டு உருவங்கள் அமைக்கும் முறை தொன்று தொட்டு வந்தது எனக் கொள்வதே பொருந்தும், தேரில் சிற்பங்கள் காஞ்சி, பூம்புகார், மதுரை முதலிய பெரிய நகரங்களில் தேரோடும் தெருக்கள் இருந்தன. எனவே கோவிலை அடுத்துத் தேர்கள் இருந்தமை தெளிவு. இன்றுள்ள தேர்களில் வியத்தகு வேலப்பாட்டைக் காண்கிருேம். இவ்வேலைப்பாடு பல நூற்ருண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற சிற்பக் கலை வளர்ச்சியாகும். பல்லவர் காலத்தில் (கி. பி. 300-900) பல்லவர் காலத்துச் சதுரத் துரண்களில் பலவகை வட்டங்கள், தாமரை மலர்கள் முதலியன பொறிக்கப் பட்டுள்ளன. சில துரண்களின் அடிப்பகுதி உட்கார்ந்த கிலேயில் உள்ள சிங்கம் போன்ற அமைப்புடையது. சில துண்களின் பெரும்பகுதி கிற்கின்ற சிங்கத்தின் அமைப்புடையது. மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண் டவர் இரதங்களில் காணப்படும் உருவச் சிற்பங்கள் அழகானவை. தனிப்பட்ட யானையின் உருவமும், சிங்கத்தின் உருவமும் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. கங்கைக்கரைக் காட்சியை உணர்த்தும் பாறைச் சிற்பமும் பிற பாறைச் சிற்பங்களும், பல்லவர்காலச் சிற்பக்கலை உயர்வைப் பறை அறைந்து தெரிவிப்பனவாகும். அங்கு ஆதிவராகர் கோவிலில் உள்ள சிம்ம விஷ்ணு.அவன் மனைவியர், மகேந்திரவர்மன்-அவன் மனைவியர் என்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/46&oldid=863005" இலிருந்து மீள்விக்கப்பட்டது