பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழகக் கலைகள் வரைக் குறிக்கும் உருவச் சிற்பங்கள் வேலைப்பாடு கொண்டவை. கயிலாசநாதர் கோவிற் சிற்பங்கள் காஞ்சி-கயிலாசநாதர் கோவில் திருச்சுற்று முழு வதும் வியத்தகு சிற்பங்களேக் கொண்டது. அதனைச் சிற்பக் கலைக்கூடம் என்றே சொல்லலாம். சிவன்-பார் வதி திருமணம், பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, சிவன் எமன உதைத்த வரலாறு, சிவன் அருச்சுனன் போர், இராவணன் கயிலேயைப் பெயர்த்தெடுத்தல், சிவன் நால்வர்க்கும் அறம் உரைத்தல், திருமால் சிவனே வழிபட்டு ஆழி பெறுதல், பிரமன்காமகள் திருமணம், திருமால்-திருமகள் திருமணம் முதலியவற்றை உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. அக்கோவிலில் சிவன் எட்டுக் கைகளுடன் ஆடும் பலவகை நடனங்கள் சிற்ப உருவில் அமைந்துள்ளன. அவற்றுள் குறிக்கத்தக்கது "லதா வ்ரிசிக கடனம்' என் பது. அதாவது, இடக்காலே முன்புறம் மடித்து ஊன்றி, வலக்காலப் பின்புறம் மடித்துத் தூக்கி இடக்கைகளில் ஒன்று தலைக்குமேல் தூக்கியபடி நடித்தல்-அங்கனம் நடிக்கும்போது இடக்கைகள் இரண்டு பந்துகளே எறிந்து பிடித்தல், இங்கடன வகையே இக்கோவிலில் பல இடங்: களில் காட்டப்பட்டுள்ளது. காஞ்சியில் உள்ள சிவன் கோவில்களில் சிவனுடைய நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் காணப்படுகின்றன. காஞ்சி-வைகுந்தப் பெருமாள் கோவில் உட்சுவர் களில் பல்லவர்கள் வரலாற்றின் பெரும் பகுதியைத் தெரிவிக்கும் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் அமைத்த குடைவரைக் கோவில்களில் உள்ள வாயிற் காவலர் உருவங்களும், திருச்சி மலைக் கோட்டையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/47&oldid=863007" இலிருந்து மீள்விக்கப்பட்டது