பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 33 உள்ள சிற்பங்கள் உட்பட்ட பிறவகைச் சிற்பங்களும் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. இதுகாறும் கூறப் பெற்ற விவரங்கள் பல்லவர் காலச் சிற்பக் கலைத்திறமைக் குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சோழர் காலத்தில் (கி. பி. 900-1800) முன்னுரை பல்லவரால் தொடங்கப் பெற்ற கற்பணிகள் சோழ ரால் நன்முறையில் வளர்க்கப் பெற்றன. பல்லவர் காலத்துக் கருவறைகளும் அவற்றில் இருந்த சுதை உருவங் களும் சோழர் காலத்தில் கல் உருவங்களாகக் காட்சி யளித்தன. கல்லில் உருவங்களே அமைக்கும் கலே சோழர் காலத்தில் விரைந்து முன்னேறியது. முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில், முதலாம் இராசேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழச்சரம், இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சரம் (தாராசுரம் கோவில்), மூன்ரும் குலோத்துங்கன் கட்டிய திரிபுவன விரேசுவரம் என்னும் கோவில்களில் சோழர் காலச் சிற்பக் கலை வளர்ச்சியைக் காணலாம். பலவகைச் சிற்பங்கள் பதின்ைகடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்கள், கலைமகள், அலேமகள், மலேமகள் உருவங்கள், மிகப் பெரிய நந்தியின் உருவம், விமானத்தில் காணப்படும் பலவகை உருவச் சிற்பங்கள், வியத்தகு வேலைப்பாடு கொண்ட துரண்கள், ஒரே வட்டக்கல்லில் நவக்கிரகங்களைக் குறிக்கும் கண்கவர் சிற்பம், அரசன் அரசியர் உருவச் சிற்பங்கள், சண்டீசப் பதம் உணர்த்தும் சிற்பம் முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும். பலவகைச் சிற்பங்களைக் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/48&oldid=863009" இலிருந்து மீள்விக்கப்பட்டது