பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழகக் கலைகள் கொண்ட தூண்கள்-அத்துரண்களைக் கொண்ட சிற்ப வேலைப்பாடு அமைந்த மண்டபங்கள் என்பவை விழிகட்கு விருந்தளிப்பனவாகும். நடனச் சிற்பங்கள் சிதம்பரம் மேலேக்கோபுர வாயிலில் நடனவகைகள் பல சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. சிவகாமி அம்மன் கோவில் திருச்சுற்றில்-திருச்சுற்றுமாளிகையின் அடிப்புறச் சுவர்களில்-பலவகை நடனச் சிற்பங்கள் காணப்படுகின் றன. சோழர் காலத்துக் கோவில்களில் ஆடல் மகளிர் மிகப் பலராக இருந்து, நடனக் கலேயை நன்கு வளர்த் தனர் என்று எண்ணிறந்த கல்வெட்டுக்கள் தெரிவிக் கின்றன. நாம் அக் கல்வெட்டுச் செய்திகளேயே தில்லைக் கோவிலில் சிற்பங்களாகக் காண்கிருேம். விசயநகர வேந்தர் காலத்தில் தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சியில் இருந்தபோது, சிற்பக்கலே சிறந்து விளங்கியது. வானளாவிய கோபுரங்கள் இக்காலத்தில்தான் எழுந்தன. அவற்றிலுள்ள சுதை உருவங்கள் இக்காலத்தில்தான் அமைக்கப்பட்டவை. திருவண்ணுமலையிலுள்ள கோபுரச் சிற்பங்களும் கோபுர வாயில்களில் காணப்படும் நடனக் கற்சிற்பங்களும் இக்காலத்தவை. விசயநகர வேந்தர் ஆட்சியில் ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் கன்னட நாட்டுச் சிற்பக்கலையும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலேயுடன் கலப்புண்டன. பலவகை வேஆலப்பாடமைந்த மிகப் பெரிய தூண்கள்-யாளிகளைக் கொண்ட தூண்கள், பலவகை ஓசைகளை எழுப்பும் கற்றுாண்கள், பல சிறிய கற்றுாண்களைக் கொண்ட பெரிய தூண்கள்-இவையெல்லாம் இக்காலத்தவையே. இராயர் கோபுரம் என்று சில ஊர்களில் காணப்படுபவையும் இக்காலத்தவை. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/49&oldid=863011" இலிருந்து மீள்விக்கப்பட்டது