பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதற்பதிப்பின் முகவுரை


முன்றாண்டு பி.ஏ. வகுப்பிற்கும் எம். ஏ. வகுப்பிற்கும் 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்பது புதிய பாடம். இதனைக் கற்பிக்கத் தனி நூல் இல்லை. இதன்கண் தமிழகக் கலைகள் ஒரு பகுதியாகும். அவை - கட்டடக்கலை, ஒவியக்கலை, சிற்பக்கலை, வார்ப்புக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக் கலே, மருத்துவக்கலை, சமயக்கலை தத்துவக்கலை, இலக்கியக்கலை முதலியன. இங்கு இவை பதினொன்றும் இடம் பெற்றுள்ளன.

இந்த நூல் மேலே குறிக்கப்பெற்ற மாணவர்க்கும் தமிழார்வம் கொண்ட பொதுமக்கட்கும் பயன்படும் முறையில் எழுதப்பெற்றுள்ளது.

தியாகராசர் கல்லூரி, மதுரை.

மா. இராசமாணிக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/5&oldid=1497557" இலிருந்து மீள்விக்கப்பட்டது