பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 35 நாயக்கர் காலத்தில் (கி. பி. 16, 17, 18 நூற்முண்டுகள்) மதுரை, தஞ்சை செஞ்சி இவற்றை ஆண்ட நாயக் கர்கள் விசயநகர வேந்தர்க்கு உட்பட்டவர்கள். ஆதலால் இவர்கள் காலத்தில் விசயநகர சிற்ப முறையே நன்கு வளர்ச்சியடைந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெரிய கோவில், திருநெல்வேலி கெல்லையப்பர் கோவில், கிருஷ்ணுபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள தாடிக்கொம்பு, பேரூர்ச் சிவன் கோவில் முதலியவற்றிலுள்ள சிற்பங்கள் இக்காலத்தவை. மதுரைப் புதுமண்டபத் தூண்களிலுள்ள சிற்பங் களும், சிவனது நடனம் முதலியவற்றை உணர்த்தும் சிற்பங்களும், மது ைஆயிரக்கால் மண்டபத் துTண்களி லுள்ள சிற்ப வகைகளும் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. மதுரை ஆயிரக்கால் மண்டபத் தூண் களிலுள்ள கண்ணப்பர், அரிச்சத்திரன், குறவன், குறத்தி, இரதிதேவி முதலியவரைக் குறிக்கும் சிற்பங்கள் சிறந்த வேலைப்பாடு உடையவை. இறந்த மைந்தனைத் தன் கைகளில் ஏந்திய வண்ணம் சந்திரமதியின் சில காணப் படுகிறது. அரிச்சந்திரன், சந்திரமதி ஆகிய இருவருடைய உடை, அணி, முதலியவற்றைக் கற்பனை செய்துள்ளமை, சிற்பியின் உயர்ந்த கலப்பண்பை உணர்த்துகிறது. குறவன் சில கூர்ந்து கவனிக்கத்தக்கது. குறவன் உடல் கட்டமைப்பு வாய்ந்தது; அவன் மார்பு அகன்றிருக் கிறது; பார்வை சிறிது கடுமையாகத் தோன்றுகிறது. இவன் கன்ருக உழைத்து வாழுபவன் என்று கருதும்படி குறவனுடைய உடலமைப்பும் முகத்தோற்றமும் காணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/50&oldid=863015" இலிருந்து மீள்விக்கப்பட்டது