பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழகக் கலைகள் படுகின்றன. அவன் அணிந்துள்ள அணிகள் பலவகைப் பட்டவை. குறத்தி நான்கு பிள்ளைகளுக்குத் தாய். ஒரு குழந்தை அவளது முதுகின்மேல் இருக்கிறது; மற்ருென்று கூடையில் இருக்கிறது; மூன்றும் குழந்தை அவள் மார்பில் துணியால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறது; நான்காம் குழந்தை அவள் கையைப் பற்றிக்கொண்டு கீழே நிற்கிறது. குழந்தை இருக்கும் கூடையைச் சிற்பி எவ்வளவு அழகாகச் செய்திருக்கிருன் என்பதை நேரிற் காண்பவரே அறிதல் இயலும். மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பிட்சாடனர் உருவம், மோகினி உருவம், காளியின் நடனச்சிலே, சிவனது ஊர்த்துவத் தாண்டவ நடனச்சிலே என்பவை சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டவை. பேரூர்ச் சிற்பங்களும் பெயர் போனவை. கிருஷ்ணுபுரச் சிற்பங்கள் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்துTர் செல்லும் பாதையில் கிருஷ்ணுபுரம் என்னும் சிற்றுார் இருக்கிறது. அங்கு வேங்கடாசலபதி கோவில் உள்ளது. அது கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் முன்பகுதியில் திருமண மண்டபம் இருக்கின்றது. அதன் ஒவ்வொரு தூணிலும் கண்ணேயும் கருத்தையும் ஈர்க்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தூண் சிற்பங் களும் ஒரு நிகழ்ச்சியை விளக்கும் முறையில் அமைந்திருக் கின்றன. சான்ருக இரண்டு சிற்பங்களைப் பற்றிய விவரங் களைக் கீழே காண்க : இரண்டாம் தூணில் பல சிலைகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது குறத்தியின் சிலை. அவள் அரசகுமாரன் ஒருவனேத் தோளில் தூக்கிக்கொண்டு ஒடுகிருள். தூணின் கீழ்ப்புறம் அரசியின் சிற்பம் காணப்படுகிறது. அவள் அன்னப் பறவை.மீது அமர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/51&oldid=863017" இலிருந்து மீள்விக்கப்பட்டது