பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 37 தன் கையிலுள்ள கிலுகிலுப்பையைக் காட்டிக் குமரனது கவனத்தை இழுக்கிருள். குறத்தி அக்குமாரனுடன் ஒடி விடுகிருள். தூணின் வடபால் அரசி குறி கேட்பது போலவும், குறத்தி 'உன் தலைவிதி; உன் மகன் வாரான்' என்று குறி கூறுதல் போலவும் உருவங்கள் அமைக் துள்ளன. மன்னன் மகனைத் தேடிக் குதிரைமீது வரு கிருன். வழியில் வீரன் ஒருவன் அக்குதிரையை வழிமறிக் கிருன். குதிரை தன் முன்கால்களால், அவனே நசுக்கு கிறது. அந்த வீரன் தன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி மூச்சடக்கிக் குதிரையின் அமுக்கலைத் தாங்குகிருன். இச்சிற்பங்கள் தூணின் மேற்குப் பகுதியில் உள்ளன. ஐந்தாம் தூணில் குறவனது உருவம் முதன்மை யானது. அவன் அரசன் மகளேத் தூக்கிச் செல் கிருன். அவனுக்கு இடப்புறம் அரசகுமாரன் குதிரைமீது வந்து ஈட்டியில் குறவனது விலாவில் குத்துகிருன். விலாவிலிருந்து குருதி பெருகிக் கொப்பூழ்வரை வருகிறது. குத்துண்ட குறவன் வலி தாங்காது துடிக்கிருன். விலா எலும்புகளும், கழுத்து நரம்புகளும் தெரியும் நிலையில் உடலை வளைந்து கொடுக்கிருன். இடப் பக்கம் மற்ருெரு வீரன் வலக்கையில் வாளேந்தி அக்குறவன் மீது பாய் கிருன்.குறவன்மீது அமர்ந்துள்ள அரசன் மகள் அவனது குடுமியைப் பற்றி இழுக்கிருள். தன்னைக் காக்க வீரர் வந்திருப்பதை அறிந்ததும் அவள் முகம் பொலிவு பெறு கிறது. இத்துரண் சிற்பங்கள் இத்துணை விவரங்களையும் உணர்த்துகின்றன. உட்புற மண்டபத் துரண்களிலும் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரதியின் சிலை குறிப்பிடத் தக்கது. அவள் அன்னப் பறவை.மீது அமர்ந்திருக்கிருள். அவளுடைய இடக்கையில் கண்ணுடியும், வலக்கையில் மலர்ப்பந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/52&oldid=863020" இலிருந்து மீள்விக்கப்பட்டது