பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலை 39 ஆங்கிலேயர் காலத்தில் வழி வழியாக வந்த சிற்பக்கலை ஆங்கிலேயர் காலத் திலும் வளர்ச்சி பெற்றது. இந்திய நாட்டு அரசப் பிரதிநிதி களின் உருவச் சிலைகளும், மாகில ஆளுநர்களின் உருவச் சிலைகளும், டாக்டர் அரங்காச்சாரி, டாக்டர் இலக்குமண சாமி முதலியார் போன்ற பெருமக்களின் உருவச்சிலைகளும் இந்த இருபதாம் நூற்ருண்டின் சிற்பக்கலைத் திறமையைச் சிறந்த முறையில் எடுத்துக் காட்டுவனவாகும். இந்த நூற்ருண்டில் அறிஞர் நாகப்பா என்பவர் சென்னேயில் சிறந்த சிற்பக்கலை வல்லுநராயிருந்து வாழ்ந்து மறைந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தகும். திருவாடானையில் உள்ள சிவன் கோவில் கோபுரமும், அதன்கண் காணப்படும் சிற்பங்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பெற்றவை. இவ்வாறே இன்று புதுப்பிக்கப் பட்டுள்ள பல கோவில்களில் இக்காலச் சிற்பிகளின் கைத் திறனைக் காணலாம். அச்சிற்பங்கள், தமிழரது சிற்பக் கலையறிவை நமக்கு உணர்த்துகின்றன. இக்கலே நன்முறை யில் வளரும்படி ஊக்குவிப்பது தமிழ் மக்கள் கடமை யாகும். - - - ஐயர்ை, முனிசுவரன் கோவில்கள் மிக்க பழையவை. அவற்றில் செங்கல், மண், சுண்ணும்பு ஆகியவற்ருல் ஆன குதிரைகள் அழகிய பெரிய உருவங்களில் அமைந்துள்ளன. உள்ளீடு இல்லாத மண் குதிரைகள் செய்யப் பெற்றும் சுடப்பெற்றும் ஐயனர் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மண் உருவங்கள் செய்யும் வழக்கம் காலத் தால் முற்பட்டதாகும். முடிவுரை "இயற்கை உருவத்தை உள்ளது உள்ளபடியே விளக்குவது அயல் காட்டுச் சிற்பம். உணர்ச்சிகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/54&oldid=863024" இலிருந்து மீள்விக்கப்பட்டது