பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழகக் கலைகள் கருத்துக்களேயும் காட்டுவதற்குக் கருவியாக உள்ளது நமது நாட்டுச் சிற்பம். அயல்நாட்டுச் சிற்பங்களில் சிறந் தவையே கிரேக்க நாட்டுச் சிற்பங்கள். ஆல்ை நமது கருத்து, அச்சிற்பங்களின் உருவ அமைப்பின் அழகோடு தங்கி நிற்கிறதே தவிர, அதற்கப்பால் செல்வதில்ல்ை. அவை மக்கள் கிலேக்கு மேம்பட்ட கடவுளின் உருவங்கள் என்கிற உண்ர்ச்சியைக் கூட உண்டாக்குவதில்லை. “15மது நாட்டுச் சிற்ப உருவங்களில் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்களோ அத்தகையன அல்ல. நமது நாட்டுச் சிற்ப உருவங்களில், கிரேக்கச் சிற்பங்களைப் போன்ற, இயற்கையோடு இயைந்த அழகிய உடலமைப்புக் காணப் படாதது உண்மைதான். ஆல்ை இச்சிற்பங்களைக் காணும் போது நமது உள்ளமும் கருத்தும் இவ்வுருவங்களில் மட்டும் நின்றுவிடவில்லை. இவ்வுருவங்கள் நமது கருத்தை எங்கேயோ இழுத்துச் சென்று உணர்ச்சிகளையும் கருத்துக் களேயும் ஊட்டுகின்றன. ஆகவே, நம் சிற்பங்கள் அயல் நாட்டுச் சிற்பங்களேப் போன்று வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று, கருத்துக்களேயும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின் றன. இந்த இயல்பு சிற்பக்கலைக்கு மட்டுமன்று; கமது நாட்டு ஓவியக் கலைக்கும் பொருந்தும். 'எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே நாட்டுவது அயல் நாட்டுச் சிற்பக்கலையின் நோக்கம்; உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் உருவங்கள் மூலமாக வெளிப்படுத்துவது நமது நாட்டுச் சிற்பக்கலையின் கோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற் கொள்ளவேண்டும்.'" - * மயிலை சீனி. வேங்கடசாமி, இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் பக். 14-15. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/55&oldid=863026" இலிருந்து மீள்விக்கப்பட்டது