பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வார்ப்புக் கலை (வழிபாட்டுக்குரிய திருவுருவங்கள்) முன்னுரை மனிதன் தான் வழிபட விரும்பிய தெய்வத்தின் உருவத்தைத் தன் அறிவில்ை கற்பனை செய்து ஓவியமாக வரைந்தான்; அந்த ஒவியத்தை வழிபட்டான்; பின்பு மண்ணுலும் மரத்தாலும் தெய்வத்தின் உருவத்தை அமைத்தான்; அதனே வழிபட்டான். பிறகு கல்லில் தெய்வ உருவத்தைச் செதுக்கினன்; அதற்கு பூசை முதலியன செய்து வழிபட்டான். செம்பு முதலிய உலோகங்களேக் கண்டறிந்த பின்னர் அவற்றை உருக்கி வார்த்துத் தெய்வ உருவங்களே அமைத்தான்; அவற்றையும் வழிப-த் தொடங்கின்ை. இவ்வாறு மனிதன் வழிபட்டு வரும் ஒவியங்கள், லிங்கங்கள், மண்ணுலும் மரத்தாலும் ஆன தெய்வ உருவங்கள், உலோகங்களால் அமைக்கப்பட்ட திருவுருவங்கள் என்பன வழிபாட்டுக்குரிய உருவங்கள் எனப்படும். கற்கால மனிதன் உருவமற்ற ஒரு கல்லேத் தெய்வ. மாக கின்ேத்து வழிபட்டான்; ஒவியம் வரையக் கற்றுக் கொண்ட பிறகு தான் வழிபட்டு வந்த தெய்வத்திற்குத் தன் கற்பனையால் ஒவிய உருவம் அமைத்தான். அவன் குடிசையில் வாழ்ந்தபொழுது தன் தெய்வத்திற்கும் ஒரு குடிசை அமைத்தான்; அதன் ஒரு சுவரில் தன் தெய்வத்தின் உருவத்தை வரைந்தான்; அந்த உருவத்தை வழிபட்டான்; நாளடைவில் ஆற்றுப் பாய்ச்சல் உள்ள இடங்களில் தங்கி வாழும் பொழுது, மண்ணேப் பிசைந்து தனக்கு வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/56&oldid=863028" இலிருந்து மீள்விக்கப்பட்டது