பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழகக் கலைகள் பாத்திரங்களைச் செய்ய அறிந்த பிறகு, தன் தெய்வத்திற்கு மண்ணேக் கொண்டே உருவத்தை அமைத்தான்; பல கிறங்களை ஊட்டிச் சட்டிகளேயும், பானைகளேயும் செய்ய அறிந்த பிறகு, தெய்வ உருவங்களுக்கும் பல கிறங்களே ஊடடினை. மரத்தைக் கொண்டு பல பொருள்களைச் செய்ய அறிந்த மனிதன், அம் மரத்தைக் கொண்டே வழிபாட்டுக் குரிய தெய்வ உருவங்களே அமைத்துக் கொண்டான்; அவற்றின் மீது பல நிறங்களைப் பூசி அழகு செய்தான்; பின்பு காலப் போக்கில் கல்லிலேயே உருவத்தை அமைக்கும் கலேயை அறிந்தான். அதுமுதல் சிற்பக்கலை வளரத் தொடங்கியது. மனிதன் தெய்வ உருவங்களைக் கல்லில் அமைக்க அறிந்தான்; சமைத்து வழிபட்டான். அறிவு வளர வளர, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையும் வளர்ச்சியடைவது போலவே - மனிதன் உலோகங்களை நிலத்தில் இருந்து எடுத்து அவற்றை உருக்கித் தனக்கு வேண்டிய பாத்திரங்களாகச் செய்ய அறிந்த பிறகு, மர அச்சின் துணையைக் கொண்டு தன் வழிபாட்டுக்குரிய தெய்வங்களின் உருவங்களே வார்த்து அமைத்துக் கொண்டான். அவை செம்பாலும், வெண் கலத்தாலும், வெள்ளியாலும், பொன்லுைம், பஞ்ச உலோகங்களாலும் அமைக்கப்பட்டன. வழிபாட்டுக்குரிய இத் தெய்வ உருவங்களின் வளர்ச்சி மனிதனது படிப் படியான அறிவு வளர்ச்சியினே நன்கு உணர்த்துகின்ற தன்ருே? - - சங்க காலத்தில் தொல்காப்பியத்தில் வீரக்கல் ஏறத்தாழக் கி. மு. 300-இல் செய்யப்பட்ட தொல் காப்பியம் என்னும் பழம் பெரும் இலக்கண நூலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/57&oldid=863029" இலிருந்து மீள்விக்கப்பட்டது