பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 43. வீரக்கல்லைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரனுக்குக் கல் நடுவது பழங் தமிழர் பழக்கம். மாண்ட வீரனது உருவம் அக் கல்லில் பொறிக்கப் பெறும். எனவே, உருவம் பொறிக்கத்தக்க பதமான கல்லைத் தேர்ந்தெடுப்பதற்கு உரியவர் சிற்பக்கலை வல்லுநரேயாவர். அவர்கள் முதலில் உருவம் பொறிக்கத் தக்க கல்லைத் தேர்ந்தெடுப்பர்; பிறகு அக்கல்லே ரோட் டுவர்; பின்பு அதில் வீரனது உருவத்தைப் பொறிப்பர்; உருவத்திற்குக் கீழ் அவனுடைய பெயரும் பீடும் எழுதுவர்;. பின்னர்க் குறிப்பிட்ட இடத்தில் நல்ல நேரத்தில் அக்கல்லை கடுவர். பின்பு அதற்கு பூசை நடைபெறும். இங்ங்னம் நடப்பெறும் கல் வீரக்கல் எனப் பெயர் பெறும். இவ்வாறு வீரர்க்குக் கல் நடுதல் தொல்காப்பியர் காலத்தில் திடீரென எழுந்ததன்று; அவருக்கு முன்பே தொன்று தொட்டு வந்த வழக்கமாகும். எனவே, தெய்வ உருவங்களே அமைக்கும் கலே தமிழகத்தில் பல நூற்ருண்டுகட்கு முன்னரே தோன்றியது என்பது ஐயமற விளங்கும் உண்மையாகும். லிங்கங்கள் குடி மல்லம், குடுமியான் மலை என்னும் இடங்களில் உள்ள கோவில்களில் காணப்படும் சிவலிங்கங்கள் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது ஆராய்ச்சி யாளர் துணிபு. குடிமல்லம் கோவிலில் உள்ள சிவலிங்கம் மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது; மிகச் சிறந்த சிற்பியால் வழுவழுப்பாக அமைக்கப்பட்டது. ஆவுடையார் அற்ற அந்த லிங்கத்தின் அடிப்பகுதியில், ஒரு கையில் ஆட்டைப் பிடித்துள்ள வேட்டுவன் உருவம் அழகாகச் செய்யப் பட்டுள்ளது. எனவே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்மவர் சிற்பக் கலையில் பண்பட்டிருந்தனர். என்பதை இச் சிவலிங்கம் நன்கு உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/58&oldid=863030" இலிருந்து மீள்விக்கப்பட்டது