44 தமிழகக் கலைகள் பல தெய்வ உருவங்கள் குறிஞ்சி கிலத்தில் முருகனும், முல்லை கிலத்தில் திருமாலும், பாலை நிலத்தில் கொற்றவையும், மருத கிலத் தில் இந்திரனும் வழிபடப்பட்டனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. எனவே, மண்ணுலும் மரத்தாலும் கல்லாலும் ஆன இத் தெய்வ உருவச்சிலைகள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. - கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் செய்யப் பெற்ற சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்னும் பத்தினிக்கு உருவம் பொறித்த வரலாறு கூறப்பட்டுள்ளது. சேரன் செங்குட்டுவன் ஏவலால் சிற்பவல்லுநர் இமயமலையிலிருந்து உருவம் பொறிக்கத்தகும் கல்லைத் தேர்ந்தெடுத்தனர்; அதனேக் கங்கையில் ரோட்டினர்; அக்கல்லே வஞ்சி மாநகருக்குக் கொண்டுவந்தனர்; பின்பு அதனில் பத்தினி யின் உருவத்தைப் பொறித்தனர்; புதிதாகக் கட்டப்பெற்ற கோவிலுள் அதனே எழுந்தருளச் செய்தனர்; குடமுழுக்கு விழாச் செய்தனர். சிற்றுார்களில் அம்பலங்கள் இருந்தன. அவற்றில் அந்தி நேரங்களில் பொதுமக்கன் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யும் கந்துகள் (மரத்துரண்கள்) இருந்தன. ஆய்வேள், லோகத்தின் சட்டையைக் கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த கடவுளுக்குக் கொடுத்தான் என்று புறநானூறு கூறுகின்றது. கல்லால மரத்தின் அடியிலிருந்து நால்வர்க்கு அறம் உரைத்தவன் சிவன் என்று நூல்கள் கூறுகின்றன. எனவே, இந்த விவரத்தை உணர்த்தும் உருவச்சிலே ஒன்று ஆய்வள்ளலின் தலைநகரில் அல்லது நாட்டில் இருந்த கோவிலில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகின்றது. - நன்னனது மலையில் காரியுண்டிக் கடவுள் (சிவன்) இருந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கின்றது. அது
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை