பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 45, சிவனேக் குறிக்கும் உருவச்சிலையே ஆகும். பேரூர்களில் சிவன், முருகன், திருமால், பலதேவன், கொற்றவை. (துர்க்கை), சூரியன், சந்திரன், அருகதேவன், புலித்தேவன் முதலிய பல தெய்வங்களுக்கும் இந்திரனது வெள்ளே யானைக்கும் கோவில்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இக்கோவில்களில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களின் உருவங்கள் சுதையாலும், மரத்தாலும், கல்லாலும் செய்யப் பெற்றிருத்தல் வேண்டும் என்று. கொள்வது பொருத்தமாகும். உலோக உருவங்கள் ஊர்வலத்திற்குப் பயன்பட்டிருக்கலாம், இன்றுள்ள காவிரிப்பூம் பட்டினத்தில் சம்பாபதி அம்மன் கோவில் சிதைந்து காணப்படுகிறது. அதில் காணப். படும் உருவங்கள் சுதையால் ஆனவை. எனவே, சுதை, உருவங்கள் சங்க காலத்தில் இருந்திருத்கல் பொருத்தமே யாகும். இன்றும் தமிழ்நாட்டுப் பழங் கோவில்கள் பல வற்றுள் கஜலட்சுமியின் உருவம் சுதையால் செய்யப் பெற்றதாகவே இருக்கிறது. மாங்காட்டு மறையவன் திருவேங்கட மலையில் திருமாலினது நின்ற திருக்கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த திருக்கோலத்தையும் கண்மண்ணி குளிர்ப்பக் கண்ட தாகச் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துக் கூறுவதால், அப். பெருமாளேக் குறிக்கும் உருவச் சிலைகள் கி. பி. 2-ஆம். நூற்ருண்டிலேயே சிறந்த வேலைப்பாடு கொண்டனவாக. இருந்திருத்தல் வேண்டுமல்லவா? - சதுக்கப் பூதம் r காவிரிப்பூம் பட்டினத்தில் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் பெரிய பூதத்தின் கோவில் ஒன்று இருந்தது. சதுக்கத்தில் அமைந்த அப்பூதத்தின் கோவில் சதுக்கப்பூதம் எழுந்தருளிய கோவில் எனப் பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/60&oldid=863038" இலிருந்து மீள்விக்கப்பட்டது