பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 46 தமிழகக் கலைகள் பெற்றது. அது முசுகுந்தன் என்ற சோழ மன்னல்ை அமைக்கப் பெற்றது. அப்பூதம் பொய்க்கரி புகல்வோ ரையும் புறங்கூறுவோரையும் ஒழுக்கங் கெட்டவரையும் பிறர் பொருளே கவர்பவரையும் அறநெறி தவறும் அமைச் சரையும் தன் கைப் பாசத்தால் பிணித்துப் புடைத்துக் கொல்லும் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. அத்தகைய பூதத்தின் கல்லாலான உருவச்சிலே ஒன்று கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள அழிந்துபட்ட பழைய வஞ்சிமாநகரப் பகுதியில் அகழ்ந்து எடுக்கப் பட்டது. அது மிகப் பெரிய உருவம்; சிறந்த வேலைப்பாடு கொண்டது. அதனேப்போன்ற உருவச் சிலையே பூம்புகார் நகரத்திலும் இருந்திருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். எல்லா மக்களும் சதுக்கப்பூதத்தை வணங்கி வந்தனர். W பல்லவர் காலத்தில் (கி. பி. 300-900) லிங்கங்கள் திருமந்திரம் என்னும் நூலின் காலம் ஏறத்தாழக் கி. பி. 400-600. அந்நூலில் பலவகை லிங்கங்கள் கூறப்பட்டுள்ளன. சுண்ணும்பு செங்கல் கொண்டு செய்யப்பட்ட லிங்கம், கல்லால் ஆன லிங்கம், படிக லிங்கம், பச்சைக் கல்லால் ஆகிய மரகத லிங்கம் எனப் பலவகை லிங்கங்கள் அக்காலத்தில் இருந்தன. தூய வெண்மையான கல்லிலும் மரகதத்திலும் லிங்கத்தை அமைத்தல் எளிதான செயலன்று. கைதேர்ந்த சிற்பிகளே அவற்றை அமைத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/61&oldid=863040" இலிருந்து மீள்விக்கப்பட்டது