பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 47 இயலும். தில்லே, திருநள்ளாறு போன்ற சில ஊர்க்கோவில் களில் உள்ள லிங்கங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. பல்லவ மகேந்திரவர்மன் காலம் முதல் கல்லின் பயன் மிகுதியாக அறியப்பட்டது. எனவே, கல் லிங்கங்கள் மிகப் பலவாகத் தோன்றின. வழுவழுப்பான லிங்கங்களும் பதினறு பட்டை திட்டப்பெற்ற லிங்கங்களும் பல்லவர் காலத்தில் ஏற்பட்டன. அவற்றின் வேலைப்பாடு நேரிற் கண்டு மகிழத்தக்கது. வார்ப்பு உருவங்கள் பல்லவர் காலத்தில் திருவாரூர் போன்ற ஊர்களில் இருந்த பெரிய கோவில் களில் மாதந்தோறும் திருவிழா நடப்பது வழக்கம் என்று திருமுறைப் பாடல்கள் தெரிவிக் கின்றன. விழாவின்போது ஊர்வலம் நடத்தல் இயல்பு. அவ்வூர்வலங்களில் இன்று போலவே உலோகங்களால் ஆன திருமேனிகள் (கடவுளர் உருவங்கள்) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருத்தல் இயல்பே அன்ருே? அங்ங்னமாயின், விழாக் காலங்களில் வழிபாட்டுக்குரிய திருமேனிகள் அக்காலத்தில் வார்க்கப்பட்டிருந்தன என்று கொள்ளுதல் பொருத்தமாகும். தில்லையில் கூத்தப்பிரான் திருமேனியைக் கண்டு, அதன்பால் ஈடுபட்டு அப்பர் அடிகள் கீழ்வரும் பாடலைப் பாடியுள்ளார்: ' குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற்குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண் ணிiறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே." சிவபெருமானுடைய புருவங்கள் வளைந்திருக்கின்றன; உதடுகள் கொவ்வைப்பழம்போல் சிவந்திருக்கின்றன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/62&oldid=863042" இலிருந்து மீள்விக்கப்பட்டது