பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - தமிழகக் கலைகள் வாயில் புன்சிரிப்புக் காணப்படுகின்றது; தலையில் (பனித்த) சடை இருக்கின்றது; உடல் சிவந்திருக்கின்றது; பால் போன்ற திருநீறு சிவந்த உடம்பில் காணப்படுகின்றது; ஒரு பாதம் நடனத்தின் பொருட்டுத் துாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறைவன் நடனமாடுகிருன். இத்துணை விவரங் களையும் அறிவிக்கும் முறையில் கூத்தப் பெருமான் திருமேனி தில்லேக் கோவிலில் அமைக்கப்பட்டிருந்தது என்று கருதுவது பொருத்தமாகும். இவ்வாறே ஆழ்வார் அருட்பாடல்கள் சில திருமாலின் திருமேனி அழகைச் சிறப்பிக்கின்றன: 'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்..' இதனே விளக்கும் முறையில்.உடலுக்குப் பச்சை நிறமும் உதடுகளுக்குச் செம்மை நிறமும் பூசப் பெற்ற கண்ணன் உருவச்சிலைகளே இன்றும் நாம் காண் கின்ருேம். இத்தகைய வழிபாட்டிற்குரிய உருவங்கள் பல்லவர் காலத்திலும் இருந்து, அடியார்களின் உள்ளங் களைக் கவர்ந்தன என்று கொள்ளுதல் பொருத்தமாகும். வாதாபி கணபதி கி. பி. ஏழாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த நரசிம்ம பல்லவரது சேனைத் தலைவரான பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்ட நாயனர் திருச்செங்காட்டங் குடியில் கணபதி ஈசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினர். அவர் காலத்தவரான திருஞான சம்பந்தர் அக்கோவிலைத் தம் பதிகத்தில் பாடியுள்ளார். சங்ககால நூல்களில் கணபதி பற்றிய பேச்சே இல்லை. கணபதி மகாராட்டிர நாட்டில் சிறப்பாக வழிபடப்பட்டு வரும் தெய்வமாகும். சிறுத் தொண்டர் வாதாபியின்மேல் படை யெடுத்தார்; சாளுக்கியரை முறியடித்தார்; அங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/63&oldid=863044" இலிருந்து மீள்விக்கப்பட்டது