பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 49 செல்வத்தையும் பல பொருள்களையும் காஞ்சிக்குக் கொண்டுவந்தார். தமிழகத்தில் இல்லாது வாதாபியில் இருந்த கணபதி உருவம் அவர் கண்ணேயும் கருத்தையும் கவர்ந்தது; அதல்ை அவர் கணபதி உருவச்சிலையைக் கொண்டு வந்தார். அதனேச் செங்காட்டங்குடியில் எழுங் தருளச் செய்தார்; அதன் பெயரால் ஒரு சிவன் கோவிலைக் கட்டினர். அதுவே கணபதி ஈசுவரம் என்பது. அக்கோவி லில் அவரால் எழுந்தருளப்பெற்ற வாதாபி கணபதி இன்றும் இருக்கின்றது. பின்பு நாளடைவில் விநாயகர் திருமேனிகள் மிகப் பல வடிவங்களில் நாட்டில் பெருகி விட்டன. சோழர் காலத்தில் (கி. பி. 900-1800) மிகப்பெரிய லிங்கங்கள் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலிலும் அவன் மகனை இராசேக்திரன் கட்டிய கங்கை கொண்ட சோமேச்சரத்திலும் மிகப் பெரிய சிவலிங்கங்கள் வழி பாட்டுக்கு உரியனவாய் அமைக்கப்பட்டன. லிங்கங்கள் முழுமையும் வழுவழுப்பாகவும் செம்மையாகவும் அமைந் துள்ளன. அவற்றின் உயரம் ஏறத்தாழப் பதிமூன்று அடி; பீடத்தின் சுற்றளவு ஏறத்தாழ முப்பது அடி. நடராசர், சந்திரசேகரர், பிட்சாடனர் எனச் சிவனைக் குறிக்கும் பல்வேறு திருமேனிகளும், மூத்த பிள்ளையார் (விநாயகர்) இளைய பிள்ளையார் (முருகன்) இவர்களைக் குறிக்கும் திருமேனிகளும் எல்லாச் சிவன் கோவில்களிலும் இருந்தன. இவ்வாறே பெருமாள் கோவில்களில் பெரு மாளின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் திருமேனி 4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/64&oldid=863046" இலிருந்து மீள்விக்கப்பட்டது