பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழகக் கலைகள் களும் பூசைக்குரியனவாக இருந்தன. அவை செம்பாலும் வெண்கலத்தாலும் வெள்ளியாலும் பொன்னலும் கோவிலின் செல்வ நிலைக்கு ஏற்றவாறு செய்யப்பட்டிருந்தன. படிமங்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தொண்டுசெய்த கோவில்களில் அவர்தம் உருவங்கள் உலோகங்களால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. தஞ்சைப் பெரிய கோவிலில் ஆலால சுந்தரர், பரவையார், சங்கிலியார், சிறுத் தொண்டர், மெய்ப்பொருள் நாயனர் முதலியோர் படி மங்கள் பூசைக்கு உரியனவாக இருந்தன. அப்படிமங்களின் கீழ் அவை குறிப்பவர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தில்லை உலா முதற் குலோத்துங்கன் காலத்தில் தில்அல மிக்க சிறப் படைந்து இருந்தது. அங்கு இறைவன் உலாப்போந்த போது, அப்பெருமானுக்கு முன்பு சமயகுரவர் கால்வர் தேர் களும், வரகுண பாண்டியன், சேரமான் பெருமாள் தேர் களும், மூத்த பிள்ளையார் இளைய பிள்ளையார் தேர்களும் தூக்கிச் செல்லப்பட்டன என்று தில்லை உலா என்னும் நூல் கூறுகின்றது. இது முதற் குலோத்துங்கன் அல்லது அவன் மகன் விக்கிரம சோழன் காலத்தில் செய்யப்பட்டது எனலாம். இந்நூற் செய்தியை நோக்க, இன்று சிவன் உலாவரும்பொழுது அக்கடவுளுக்கு முன் மனிதர் தூக்கிச் செல்லும் சிறிய சப்பரங்களில் நால்வர் முதலியோரைக் குறிக்கும் திருவுருவங்கள் எடுத்துச் செல்லப்படுதல் போலவே-கி. பி. பதினேராம் நூற்ருண்டிலும் திருமேனி களும் படிமங்களும் உலாவின்போது எடுத்துச் செல்லப் பட்டன என்பதை அறியலாம். அறியவே, அக்காலத்தில் உலோகங்களால் ஆன திருமேனிகளும் படிமங்களும் கோவில்களில் இருந்தன என்பது தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/65&oldid=863048" இலிருந்து மீள்விக்கப்பட்டது