பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 51 நாயன்மார் திருவுருவங்கள் - ஒவ்வொரு பெரிய சிவன் கோவில் இரண்டாம் திருச்சுற்றிலும் நாயன்மாரைக் குறிக்கும் கல்லாலான திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறே செம் பாலான திருவுருவங்களும் இருக்கின்றன. அவற்றுள் கல்லாலான திருவுருவங்கள் நாள்தோறும் பூசிக்கப்படு கின்றன. செப்புப் படிமங்கள் நுட்பவேலைப்பாடு பொருங் தியவை. கால்வர் படிமங்கள் தனிச் சிறப்புப் பெற்றவை; எனவே, நாளும் தவருது வழிபடப்படுகின்றன. அவரவர் வரலாற்றை நன்கு படித்தறிந்த கலே வல்லுநர் அவ்வர லாறுகளை உளங்கொண்டு, அவர்தம் திருவுருவங்களே அமைத்துள்ள திறம் பாராட்டற்குரியது. திருநாவுக் கரசர் மழித்த தலேயுடனும் முழங்கால் வரை கட்டப் பெற்ற ஆடையுடனும் உழவாரப்படையுடனும் நிற்பதாக அவர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தர் சிறு பிள்ளையாதலால் அவரது கூந்தல் மேலே முடிக்கப் பட்டுள் வrது; கோவிலில் தாளம் பெற்ற வராதலால் அவர் கைகளில் தாளம் கொடுக்கப்பட்டுள்ளது. சுந்தரர் குருக்கள் பிள்ளே யாயினும், நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசரால் செல்வாக்குடன் வளர்க்கப் பெற்றவராதலால் தலையில் முடியுடனும் சிறந்த உடை விசேடத்துடனும் இருப்பதாக அவரது படிமம் அமைக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் முற்றும் துறந்தவராதலால், அத்துறவு கிலேயை அறிவிக் கும் முறையில் அத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவுருவங்கள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. இத் திருவுருவங்கள் அமையப்பெற்ற அச்சுக்களில் உலோகங் களை உருக்கி வார்த்து உலோகத் திருவுருவங்கள் செய்யப் படுகின்றன. இங்ங்னம் செய்யப்பட்ட திருவுருவங்கள் கண்ணேயும் கருத்தையும் கவருகின்றன எனின், தமிழர் தம் உருக்கு வார்ப்புக்கலையின் திறனே என்னென்பது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/66&oldid=863050" இலிருந்து மீள்விக்கப்பட்டது