பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழகக் கலைகள் இவ்வாறே சிவபெருமானுடைய பலவகைத் திருவுரு வங்களே உணர்த்தும் உலோகத் திருமேனிகள் அற்புத வேலைப்பாடு கொண்டவையாக அமைந்திருக்கின்றன. திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் உலோகத் திருமேனிகளும் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. ஐயனர் பல்லவர் காலத்திலேயே ஐயனர் வழிபாடு இருந்தது. ஐயனர் சிவன் மகன் என்பது புராணச் செய்தி, தக்கயாகப் பரணியில் ஐயனர் குறிக்கப்பட்டுள்ளார். வீரபத்திரரும் குறிக்கப்பட்டுள்ளார். இத் தெய்வங்களின் திருவுருவங்கள் மண்ணுலும் மரத்தாலும் கல்லாலும் உலோகங்களாலும் இயன்றவை. காளியின் பல வடிவங்களே உணர்த்தும் திரு வுருவங்கள் சிலப்பதிகார காலம் முதலே காட்டில் இருந்து வருகின்றன. அவை சோழர் காலத்திலும் இருந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராமன் கோவில் ஏற்பட்ட பிறகு அநுமன் திரு உருவம் வழிபாடு பெற்றது. அத்திருவுருவம் பெரும் பாறைகளிலும் தனிக் கற்களிலும் அழகாகச் செதுக்கப் பெற்று இன்றளவும் வழிபாடு பெற்று வருகின்றது. புத்தர் கோவில்களில் புத்தருடைய திருவுருவங்கள் பொன்னலும் பிறவற்ருலும் செய்யப் பெற்றன. இவ்வாறே அருக தேவனது திருவுருவமும் தீர்த்தங்கரர் திருவுருவங்களும் உலோகங்களில் செய்யப் பெற்றுப் பூசிக்கப் பெற்றன; இன்றும் பூசிக்கப பெறுகின்றன. பிற்காலத்தில் சோழப் பேரரசர் ஆட்சிக்குப் பிறகு சைவ - வைணவ-சமண-பெளத்த திருவுருவங்கள் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/67&oldid=863052" இலிருந்து மீள்விக்கப்பட்டது