பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை 53 வழிபாடு பெற்று வந்தன. தமிழகத்தில் புதியனவாக இசுலாம், கிறித்தவம் என்னும் சமயங்கள் நுழைந்தன. இசுலாம், உருவ வழிபாடு அற்ற சமயம். கிறித்தவம் சிலுவை, இயேசுநாதர், தாயார் இவர்கள் வழிபாடு பெற்றது. எனவே, இவர்தம் திருவுருவங்கள் கோவில்களில் எழுந்தருளப் பெற்றன. அவற்றை மக்கள் பூசித்து வந்தனர்; வருகின்றனர். கிராமக் கோவில் திருவுருவங்கள் இன்று உள்ள கிராமங்களில் கிராம தேவதைகளின் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சுதையாலோ மரத்தாலோ கல்லாலோ அமைந்த தேவதைகளின் திருவுருவங்கள் வழிபாடு பெறுகின்றன. ஐயனர், கருப்பண்ணசாமி, முனிசுவரன் முதலிய சிறு தெய்வங்கள் உள்ள கோவில்கள் பல நம் தமிழகத்தில் இருக்கின்றன. அவை சுதையாலோ கல்லாலோ இயன்றவை. முனிசுவரர் திருவுருவங்கள் பல அடி உயரமும் அகலமும் உடையவை. அவை செங்கல்லும் சுதையும் கொண்டு அமைந்தவை. அவற்றின் வேலப்பாடு கண்ணக் கவருவதாகும். இக்காலத்தில் சைவ வைணவக் கோவில்களில் கடவுளர் திருவுருவங்கள் பலவாகக் காணப்படுகின்றன. சிவபெருமானுக்குச் சிறப்பாக இருபத்தைந்து திருவுருவங் கள் கூறப்படுகின்றன. அவை 1. இலிங்கோத்பவ மூர்த்தி, 3. சுகாசனமூர்த்தி, 3. உமாமகேசர், 4. கலியாணசுந்தரர், 5. மாதொருபாகர் (அர்த்தகாரி), 6. சோமாஸ்கந்தர், 7. சக்கரப் பிரசாதனமூர்த்தி, 8. திரிமூர்த்தி, 9. அரிய மூர்த்தி, 10. தகழினமூர்த்தி, 11. காமாந்தகர், 13. சலந்தர சம்மாரமூர்த்தி, 18. திரிபுராந்தகர், 14. பிக்ஷாடனர், 15. கங்காளமூர்த்தி, 16. காலசம்மாரமூர்த்தி, 17. சரப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/68&oldid=863054" இலிருந்து மீள்விக்கப்பட்டது