பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. தமிழகக் கலைகள் மூர்த்தி, 18. நீலகண்டர், 19. திரிபாதமூர்த்தி, 20. ஏகபாத மூர்த்தி, 21. பைரவமூர்த்தி, 33. இடபாரூடமூர்த்தி, 23. சந்திரசேகரமூர்த்தி, 34. நடராசமூர்த்தி, 35. கங்காதர மூர்த்தி என்பன. - - இவற்றில் தகழிறமூர்த்தி உருவத்தில் வினுதர தகவிணமூர்த்தி என்றும், ஞான தகதினமூர்த்தி என்றும், யோக தகதினமூர்த்தி என்றும் பலபிரிவுகள் உள்ளன. நடராசர் மூர்த்தத்தில் சந்தியா தாண்டவ மூர்த்தி, காளிகாதாண்டவ மூர்த்தி, புஜங்கத் திராசமூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி முதலிய பிரிவுகள் உள்ளன. - பைரவ மூர்த்தத்தில் பிட்சாடன பைரவர், லோக பைரவர், காள பைரவர், உக்கிர பைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன. அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்கள் உள்ளன. கணபதி உருவத்தில் பாலகணபதி, நிருத்த கணபதி, மகாகணபதி, வல்லபை கணபதி முதலிய பலவகையுண்டு. சுப்பிரமணியர் உருவத்தில் தண்டபாணி, பழகி யாண்டவர், வேல்முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்திதேவர், நாயன்மார்கள் முதலியவர்களின் உருவங்களும் உள்ளன." வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன், கோவிந்தன், அந்தசயனன்,

  • மயிலை. சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக், 48-49. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/69&oldid=863056" இலிருந்து மீள்விக்கப்பட்டது