பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புக் கலை - 55 கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்கிரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன. இலக்குமி, கஜலக்குமி, பூதேவி, ரீதேவி முதலிய உருவங்களும், ஆழ்வார் பன்னிருவர் உருவங்களும் உள்ளன. இன்றைய தமிழகத்தில் வடஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் சமணர் சிற்றுார்கள் சில இருக்கின்றன. அங்குள்ள சமணர் கோவில்களில் அருகதேவர் திருவுருவங் களும் தீர்த்தங்கரர் திருவுருவங்களும் வழிபாடு பெறுகின்றன. - வியத்தகு வேலைப்பாடு உலோகங்களை உருக்கி, அந்தந்த மூர்த்திகள் செதுக்கப் பெற்ற அச்சில் வார்த்து, கடவுளரின் திருவுருவங்களும் அடியார் திருவுருவங்களும் கண்ணக்கவரும் முறையில் அமைக்கப்பட்டன - இன்றும் அமைக்கப்படுகின்றன என்பதை நோக்க, ஒவ்வோர் உருவத்துக்குரிய அச்சினைத் தயாரிக்கும் கலையும் வார்ப்புக் கலையும் எந்த அளவு தமிழகத்தில் முன்னேறி இருந்தன-இன்றும் இருக்கின்றன என்பதை நன்கு அறியலாமன்ருே? இக்கலை அறிவு இன்றும் தமிழகத்தில் மிக உயர்ந்து காணப்படுகிறது என்பதில் ஐயமில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/70&oldid=863060" இலிருந்து மீள்விக்கப்பட்டது