பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இசைக் 3&ు இசையின் சிறப்பு இசை என்னும் சொல் இசைவிப்பது-தன் வயப் படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் பெற்றி வாய்ந்தது. கற்ருேரும் மற்ருேரும் இசையின் வயப்பட்டே நிற்பர்; அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புரு த உயிர்கள் இல்லையென்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலிய உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங் குழவியும் இசை வயப்பட்டுப் பாலேயும் பசியையும் மறந்து கண்கள் செருக மகிழ்ச்சியடைகின்றது. இசையின் வயப்படாதார் அன்பின் வயப்படார் என்றே கூறுதல் அமையும். இசை வாழ்க்கையில் இன்பத்தை அளிக்கும். இசையின் அருமையையும் பெருமையையும் ஒர்ந்தே தமிழர் இசைத்தமிழை முத்தமிழுள் நடுநாயகமாக வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே இருக்கின்றன. பண்டைத் தமிழகத்தில் செய்யப்பெற்ற நூல்களில் பெரும்பாலானவை செய்யுள் வடிவிலேயே அமைந்தவை. பிற்காலத்தில் தோன்றிய கல்வெட்டுக்கள் யாவும் அங்ங்னமே அமைந்துள்ளன. அவற்றிற்கும் பிற்படத் தோன்றிய அஞ்சல் வடிவில் அமைந்துள்ள சீட்டுக் கவிகளும் மிக்கிருத்தலேக் காண, ஏறத்தாழப் பதினெட் டாம் நூற்ருண்டு வரையில் தமிழகத்தில் இசைத்தமிழ் நூல்களே மிக்கிருந்தன என்று கூறுவது பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/71&oldid=863062" இலிருந்து மீள்விக்கப்பட்டது