பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்கலை 57 தமிழ்ப் பிள்ளைகள் தம் குழந்தைப் பருவத்தில் தாலாட்டுப் பாக்களேயும் ஊசல் பாக்களேயும் கேட்டனர். விளையாடும் பருவத்தில் பந்து விளையாடும் பாடல்கள் (கந்துக வரி), அம்மானை, பொற் சுண்ணம், சாழல், தெள்ளேனம், உந்தி பறத்தல், தோள் நோக்கம் முதலிய ஆடல்களுக்குரிய பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்; மணத்தில் மங்கல வாழ்த்துப் பாடலைப் பாடினர்; உலக்கை கொண்டு குற்றும் தொழிலுக்குரிய பாட்டு வள்ளேப்பாட்டு என்ற பெயர்பெற்றது. ஏற்றம் கொண்டு நீர் இறைப்பவர் பாடிய ஏற்றப்பாட்டு முதல் உழைப்புத் தொழில்கள் அனைத்திற்கும் பாடல்கள் இருந்தன என்பது தெரிகிறது. தமிழன் இறந்த பின்னரும் பாட்டு அவனே விடவில்லை; பலவகைச் சந்தங்களில் ஒப்பாரி பாக்கள் இன்றும் இருத்தலேக் காணலாம். இங்ங்னம் பழந்தமிழர் தம் பிறப்பு முதல் இறப்பு வரையில் இசையிலேயே வாழ்ந்து வந்தனர் எனக் கூறுதல் முற்றிலும் பொருந்தும். சங்க காலத்தில் தமிழ்ப் பண்கள் ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெற்றன. இவற்றி லிருந்து பிறப்பன திறங்கள் எனப்பட்டன. இவ்வாறு பிறக்கும் பண்களும் திறங்களும் பல கிளேகளாக இயங்கும் வகைகளில் எண்ணிறந்த இசைவகைகள் கண்டறியப் பட்டன. தமிழ்ப் பண்கள் குறிஞ்சிப் பண், பாலேப் பண், முல்லைப் பண், மருதப் பண், நெய்தற் பண் என்று பெரும் பண்கள் ஐந்து. இவற்றின் வகைப்பட்ட பண்கள் பல. அவற்றுள் பகற் பண்கள், இரவுப் பண்கள், காலை மாலைப் பண்கள் என அவ்வப் பொழுதிற்கமைந்த பண்களும் வழக்கிலிருந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/72&oldid=863064" இலிருந்து மீள்விக்கப்பட்டது