பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழகக் கலைகள் பழைய மனிதன் உணர்ச்சிப் பெருக்கால் பாடினன். கொண்டர், சவரர் முதலிய அநாகரிக மக்களிடம் பாட்டு முதன்மை பெற்றிருப்பதை இன்றும் காணலாம். எனவே, மனித உள்ளத்திற்குப் பாட்டு அமுதமாகப் பயன்பட்டதுபயன்பட்டு வருகிறது என்பது தெளிவு. இந்த உண்மையை உணர்ந்து குறிஞ்சி முதலிய கிலங்களுக்கு உரிய கருப் பொருள்களைக் கூறவந்த தொல்காப்பியர் முதலிய தொல் ஆசிரியர்கள் இசைக் கருவிகளையும் பண்களையும் சேர்த்துக் கூறினர். தொல்காப்பியம்-அகத்திணையியலில் இவை பற்றிய விவரங்களேக் காணலாம். குறிஞ்சி கில மக்கள் இறை வழிபாட்டில் இனிமையாகப் பாடிக்கொண்டு குன்றக் குரவை ஆடினர்; கொற்றவையை வழிபடப் பாலே நில மக்கள் பிற கருவிகளையும் பயன்படுத்தி வேட்டுவ வரி பாடினர். முல்லை நில ஆய்ச்சியர் தாம் பாடிய ஆய்ச்சியர் குரவையில் முல்லை நிலத்திற்குரிய கருவிகளையும் பண்களே யும் பயன்படுத்தினர். மருத யாழும், மருதப்பண்ணும் மருத நிலத்திற்குரியவை. நெய்தல் யாழும், நெய்தல் பண்ணும் நெய்தல் கிலத்திற்கு உரியவை. - 鱗 வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் அவற்றின் இனங்களும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. பரிந்து வரும் இசையில் பாடுவது பரிபாடல். பண்-இராகம், பாண்-பாட்டு, பாணர்பாடகர், பாடினியர்-பெண் பாடகர். பாணரும் பாடினியரும் இசைத்தமிழ்ப் புலவராவர். இவருள் சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வகைகளே இசைத்துப் பாடுவோரும் உளர். அவர்கள் முறையே சிறுபாணர் என்றும் பெரும்பாணர் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் தம் கருவிகளை இசைத்துக் கொண்டே வள்ளல்களின் புகழைப்பாடி பரிசில் பெற்று வாழ்ந்தனர் பரிசில் பெற்ற பாணர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/73&oldid=863066" இலிருந்து மீள்விக்கப்பட்டது